தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக தலைமை விரைவில் அறிவிக்கும் – பாஜக

பாஜக மாநில தலைவர் L.முருகன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;தமிழக பாஜக சார்பில் 1000 இடங்களில் விவசாயிகளை சந்தித்து வேளாண் திருத்த சட்டங்களின் பலன்களை விளக்கபட்டு வருகிறது.நாளை இரண்டாம் கட்டமாக விவசாய ஊக்க தொகை வங்கிகள் மூலம் நேரடியாக 2000 ரூ வழங்கபட உள்ளது.தமிழகத்தில் திமுகவின் பந்தக்கு வெற்றி அடைய வில்லை. திமுக ஆட்சியில் போது 42 க்கும் மேற்பட்ட விவசாயிகள் துப்பாக்கிசூடு நடத்தபட்டது.கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கை விவசாயிகளுக்கு சாதகமாகும் வகையில் விளை பொருட்களை எந்த பகுதியிலும் விற்பனை செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளார். இன்றைக்கு வேறுவிதமாக பேசி வருகிறார்.எஸ்ரா சற்குணம் பாதிரியார் இறைவனுக்கு தொண்டாற்றாமல் வேண்டும் அதை விடுத்து திமுக கூட்டங்களில் மோடியை ஒருமையில் பேசியது கண்டிக்கிறோம்.அதற்கு காவல்துறையினர் உரிய நடைவெடிக்கை மேற்கொள்வேண்டும் இல்லை என்றால் பாஜக சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும்.தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக தலைமை விரைவில் அறிவிக்கும்.2500ரூ என்பது பொங்கல் திருநாளை தமிழக மக்கள் கொரோனாவிற்கு பிறகு எந்த இடற்பாடும் இல்லாமல் கொண்டாட வேண்டும் என்று வழங்கப்பட உள்ளது. அதற்கு வரவேற்கிறேன். முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.ஆளுநரிடம் திமுக தலைவர் ஸ்டாலின் அளித்த புகார் குறித்து பரிசீலனை கொண்டு எந்தமாறியான நடவடிக்கையும் எடுப்பார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்