அனுப்பானடியில் முன்விரோதம் காரணமாக தாக்கியவர் மீது போலீசில் வழக்கு பதிவு

அவனியாபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அனுப்பானடி பொண்ணு பிள்ளை தோப்பு பகுதியை சேர்ந்தவர் மகராஜன் மகன் முத்துச்செல்வம் (வயது 32)இவருக்கும் இதே பகுதியில் உள்ள முருகேசன் மகன் அஜித்குமாருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.இந்த நிலையில் நேற்று அவ்வழியாக வந்த முத்து செல்வத்தை மறைத்து அஜித்குமார் வம்பிழுத்து அவரை தாக்கியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட முத்துச்செல்வம் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதன்பேரில் அஜித்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்