மதுரை வில்லாபுரம் பகுதியில் அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த திமுக நிர்வாகி நல்லமருதுவின் வீட்டிற்கு சென்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி அவருடைய உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்..!தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு முக்கியமாக இருக்கும் எனவும் தெரிவித்த அழகிரி,புதிய கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு இம்மாதம் நடைபெறும் கட்சி நிர்வாகிகளுடனான கூட்டத்தில் ஆலோசித்து புதிய கட்சி தொடங்குவது எனது முடிவை அறிவிப்பேன் என்று கூறினார்..!!தயாநிதிக்கு திமுகவில் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு வதந்திகளுக்கு எதுவும் பதில் கூற முடியாது..அமித்ஷாவை நான் சந்திக்க போவதாக கூறிய வதந்தி போல தான் இந்த செய்தியும் என்று மு.க . அழகிரி கூறினார்…!!
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.