Home செய்திகள் வெஸ்ட் சர்ட்டிபிகேசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மதுரை கலெக்டர் பாராட்டு

வெஸ்ட் சர்ட்டிபிகேசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மதுரை கலெக்டர் பாராட்டு

by mohan

மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதர்காக WASH (work place assessment for safety and hygiene) என்ற திட்டத்தை உருவாக்கி உள்ளது. இத்திட்டம் கோவிட்-19 காலத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தின் போதும் பொது முடக்கத்திற்கு பின்பும் எவ்வாறு அலுவலகங்கள் செயல்படுகின்றன என்பதை மதிப்பீடு செய்கிறது. பல்வேறு நெறிமுறைகள் மூலம் அரசுமற்றும் தனியார் நிறுவனங்களிள் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுகாதாரதேவைகள் போன்றவற்றில் கவனம் செலுத்த உதவுகின்றது.

இந்தியாவின் தரக்கட்டுப்பாட்டு நிர்ணய கழகம் (QUALITY COUNCIL OF INDIA underDPIIT – Department for promotion of industry and internal trade)ஒப்புதல் அளித்த குவெஸ்ட் சர்ட்டிபிகேசன் பிரைவேட் லிமிடெட் (Quest Certification private limited- Assessment Agency)என்ற நிறுவனம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதிப்பீட்டை மேற்கொண்டது.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகவளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனாவைரஸ் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகளையும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகவளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தானியங்கி கை சுத்திகரிப்பான் இயந்திரம் நிருவப்பட்டதற்கும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கை கழுவுவதற்காக நிறுவப்பட்ட சிறப்பு ஏற்பாட்டினையும், உடல் வெப்பசோதனைக் கருவி மூலம் வெப்பநிலையை அறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய் குவெஸ்ட் சர்ட்டிபிகேசன் பிரைவேட் லிமிடெட் (Quest Certification private limited- Assessment Agency) இயக்குநர் பி.கார்த்திகேயன் பாராட்டி நற் சான்றிதழை (20.08.2020)குவெஸ்ட் சர்ட்டிபிகேசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மதுரை கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார் .

செய்தியாளர் .வி காளமேகம். மதுரை

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com