புதிய கல்வி கொள்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து, மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடி வாசல் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, நகரச் செயலாளர் வெங்கடேஷ் பிரபு தலைமை வகித்தார்.தொகுதி பொறுப்பாளர் சக்கரபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கோஷமிட்டனர்.இதேபோல, அலங்காநல்லூர் அருகே புதுப்பட்டியில் நாம் தமிழர் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு, விக்கிரம்மன் தலைமை வகித்தார்.கோட்டைமேடு கிராமத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, திருப்பதி தலைமை வகித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..