Home செய்திகள் ஸ்கெட்ச்’ போட்ட மதுரை போலீஸ் – அதிரடியாக தடுக்கப்பட்ட ’பழிக்குப் பழி’ கொலை

ஸ்கெட்ச்’ போட்ட மதுரை போலீஸ் – அதிரடியாக தடுக்கப்பட்ட ’பழிக்குப் பழி’ கொலை

by mohan

மதுரையில் கடந்த இரு வருடங்களாக பழிக்குப்பழி கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.  பலிக்கு பலி நடைபெறும் கொலைகளை தடுக்க மதுரை மாநகர முன்னாள் காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தார். இருந்தபோதிலும் அவ்வப்போது பழிக்குப்பழி கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருந்தன. தற்பொழுது மதுரையில் புதிய காவல் ஆணையாளர் பதவியேற்ற பிரேம் அனந்த் சின்கா, பழிக்குப் பழியாக நடக்கும் கொலைகளை தடுப்பதற்காக தனிப்படையினர் அமைத்துள்ளார். இந்த தனிப்படையினர். மதுரை மாநகரில் கடந்த சில வருடங்களாக நடந்த கொலை வழக்குகள் கொலை முயற்சி வழக்குகள் மற்றும் ரவுடிகள் இடையே நடைபெற்ற கோஷ்டி மோதல் குறித்து விவரங்களை சேகரித்து வந்தனர், இந்த நிலையில் செல்லூர் பகுதியை சேர்ந்த ஜெகதீசன் என்கின்ற முத்துக்குமார் மற்றும் பைனா மணி என்ற மாரிமுத்து ஆகிய இருவரும் பயங்கர ஆயுதங்களுடன் கொலைக்கான சதித்திட்டம் திட்டுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்த காவல் ஆய்வாளர் கோட்டைச்சாமி தலைமையிலான தனிப்படையினர் அவர்களிடம் கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். பின் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற அவர்களிடம் விசாரணை நடத்தியதில், முத்துக்குமார் மதுரை மதிச்சியம் காவல் நிலையத்தில் 2014ம் ஆண்டு ஒருவரை கொலை செய்ய முயன்றபோது வெட்டு காயம் அடைந்தார் அந்த நபர் தப்பியதாக தெரியவந்தது இந்த நிலையில் முத்துக்குமாரை கொலை செய்து விடலாம் என்று என்ற அச்சத்தில் மீண்டும் அந்த நபரை கொலை முயற்சியில் ஈடுபட இருந்தது தெரியவந்தது தனிப்படையினர் விரைந்து செயற்பட்ட காரணத்தினால் மதுரையில் நடக்க விருந்த ஒரு கொலை தடுத்து நிறுத்தப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!