
தமிழக அரசும் – அரசு போக்குவரத்து கழக நிர்வாகமும் “அரசாணைக்கு விரோதமாக பிடித்தம் செய்த சம்பளம் , வீடுப்பை திரும்ப வழங்கிட வேண்டும். பராமரிப்பு தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி பணிக்கு வரச்சொல்லும் நடவடிக்கை கைவிட வேண்டும். ஊரடங்கு காலத்தில் பணிபுரிந்த நாட்களுக்கு அனைத்து தொழிலாளர்களுக்கும் சிறப்பு ஊதியம் , பேட்டா , இன்சென்டிவ் வழங்க வேண்டும் . அரசு துறையில் வழங்குவதுபோல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ .2 இலட்சம் . மரணம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ .50 இலட்சம் வழங்க வேண்டும். 2019 ஏப்ரல் முதல் ஓய்வு பெற்றோர் பணபலன்களை உடனே வழங்கிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” மதுரை அரசு போக்குவரத்து பணிமனைகள் முன் சிஐடியு, தொமுச, ஏஐடியுசி, டிடிஎஸ்எப், எச்எம்எஸ், ஏஏஎல்எல்எப், டியுசிசி ஆகிய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்புகள் சார்பில் வெள்ளியன்று மதுரை அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சிஐடியு பொதுச் செயலாளர் ஏ. கனகசுந்தர் தலைமையில் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தலைமையகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது எல்பிஎப் பொதுச் செயலாளர் வி. அல்போன்ஸ் கோரிக்கைகளை விளக்கி பேசினார் இதில் அனைத்து சங்க நிர்வாகிகள் பங்கேற்று தமிழக அரசுக்கும் அரசு போக்குவரத்து நிறுவனத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள் மேலும் மதுரையில் உள்ள 16 பணிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.