
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வது வார்டு பழங்காநத்தம் டிவிஎஸ் நகர் இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை அருகே இஎஸ்ஐ மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. மருத்துவமனை அருகே பல நாட்களாக மழைநீர் மற்றும் கழிவு நீர் தேங்கி கொசுக்கள் அதிக அளவில் பெருகி வருகிறது.
இதை அதிகாரியிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என மருத்துவமனை குடியிருப்புவாசிகள் நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் மருத்துவமனையில் குடியிருப்புவாசிகள் நோய் தொற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர். நடவடிக்கை எடுப்பார்களா மாநகராட்சி அதிகாரிகள்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.