
மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக முன்விரோதம் காரணமாக பழிக்குப் பழி தீர்க்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது,அதன் ஒரு பகுதியாக மதுரையில் கடந்த சில தினங்களாக கொலை செய்யபட்டவர்களின் உறவினர்கள் நண்பர்கள் எதிர்தரப்பினர் பழிவாங்கும் நோக்கோடு நினைவு அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டும் பொழுது எதிர்தரப்பினர் மிரட்டும் வகையிலும் பழிவாங்க காத்திருப்பது போன்ற வசனங்கள் அடங்கிய போஸ்டர்களை மதுரையில் ஒட்டி வரும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது,இது தொடர்பாக காவல்துறையினர் பலமுறை எச்சரித்தும் எச்சரிக்கையை மீறி மதுரை கரும்பாலை பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரியான ராஜசேகர் கடந்த ஓராண்டுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் வெட்டிக் கொலை செய்தனர்,இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் உட்பட 8 பேரை பழிவாங்கும் நோக்கோடு கடந்த சில தினங்களுக்கு முன்பு எட்டு பேரில் ஒருவரான முருகன் மருத்துவமனையில் இருந்தபோது மருத்துவமனைக்கே சென்று கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவமும் அரங்கேறியது, இந்த நிலையில் மீதமுள்ள 7 பேரை கொலை செய்யும் நோக்கோடு பழிக்கு பழி தீர்க்க வேண்டும் என்னதோடு “அடக்க முடியாத கோபத்தை கட்டி வை,காலம் உன்னிடம் வரும்,வெற்றி வீரமும் உன்னிடமே பட்டா பயலுக” என்ற வாசகம் அடங்கிய போஸ்டர் அடித்து ஒட்டுயுள்ளனர்,இந்த சம்பவம் தொடர்பாக கரும்பாலை பகுதியைச் சேர்ந்த சிறார்கள் எட்டு பேரை அண்ணாநகர் காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்,பழிதீர்க்கும் என்னத்தோடு மதுரை மாநகர் முழுவதும் போஸ்டர் ஒட்டும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மதுரை மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.