அழகர்கோயில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சுந்தரராஜ பெருமாள் தங்க கருட சேவையில் எழுந்தருளினார்

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் 20.07.2020 ஆடி அமாவாசை திருவிழா கொரானா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக , தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டு , ஊரடங்கு நடைமுறையில் உள்ளது . இச்சூழ்நிலையில் சமூக இடைவெளி பின்பற்றப்படுவது அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு திருக்கோயில் வளாகத்திற்குள்ளேயே ஆகம விதிப்படி நடைபெறும் என கோவில் இணை ஆணையாளர் அனிதா தெரிவித்து இருந்தார் அதன் அடிப்படையில்… 20.07.2020 நேற்று மாலை அருள்மிகு கள்ளழகர் கெருட வாகனத்தில் அலங்காரம் ஆகி சேவை சாதித்து பின்பு அருள்மிகு பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதியின் கதவுகளுக்கு சந்தனம் சாத்துப்படி திருக்கோயில் மூலமாக பொதுமக்கள் மற்றும் முறைதாரர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது என்ற விபரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது . மேலும் வருடந்தோறும் அருள்மிகு 18 ம்படி கதவுகளுக்கு சந்தனம் சாத்தும் முறைதாரர்கள் இந்த ஆண்டு வழக்கம்போல் 18 ம்படி கதவுகளுக்கு சாத்துபடி செய்ய சந்தனம் மற்றும் மாலைகளை கோட்டைவாசலில் வைத்து திருக்கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர் , முறைதாரர் வழங்கிய சந்தனம் இன்று முறைப்படி அருள்மிகு 18 ம்படி கதவுகளுக்கு திருக்கோயிலில் சாத்துபடி செய்யப்பட்டது .

செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்..

உதவிக்கரம் நீட்டுங்கள்..