மதுரை மாவட்டம் ஜெயந்திபுரம் மீனாம்பிகை தெருவைச் சேர்ந்த 33 வயது இளைஞர் மதுரை பழங்காநத்தம் அதிலுள்ள உள்ள தனியார் மருத்துவமனையில் கொரானா பரிசோதனை மேற்கொண்டுள்ளார் .இதில் அவருக்கு பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதனை அடுத்து அவர் வீட்டுக்கு செல்லாமல் அழகப்பன் நகர் சுந்தரர் தெரு அருகே சாலையில் அமர்ந்துள்ளார். அங்கிருந்து அவரது நண்பருக்கு தொலைபேசி மூலமாக தகவல் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தார்கள். இது தொடர்பாக அப்பகுதி மாநகராட்சி சுகாதார அதிகாரி தொடர்பு பால்பாண்டி கொண்டனர். ஆனால் அவர் தொலைபேசியை எடுக்கவில்லை. இதனைத்தொடர்ந்து அவர்கள் நண்பர்கள் தனியார் தொலைக்காட்சி நிருபர் கேப்டன் டிவி பாலா முருகன் தொடர்பு கொண்டு நடந்தவற்றை தெரிவித்தனர். பாலமுருகன் சமூக ஆர்வலர் காளமேகத்திடம் தெரிவிக்கவே வாருங்கள் இருவருமே சென்று சம்பவ இடத்திற்கு செல்லலாமென சம்பவ இடத்திற்கு சென்றார்கள். முதலில் அப்பகுதி சுகாதார ஆய்வாளருக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள முயற்சித்தோம். அவர் தொலைபேசி எடுக்காத காரணத்தினால் மதுரை மாவட்ட ஆட்சியாளர் இதுகுறித்து தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மீண்டும் மதுரை மாநகராட்சி ஆணையாளர் அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக தகவல் கொடுக்கவும் மாநகராட்சி ஆணையாளர் உடனடியாக தனியார் ஆம்புலன்சை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தார் சுமார் இரண்டு மணி நேரம் ஆம்புலன்ஸ் காக காத்திருந்து பின் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன( தண்டிக்க வேண்டிய விஷயங்கள் முதலில் சுகாதார ஆய்வாளர் பால்பாண்டி(+918300606091 )என்பவர் தொலைபேசியை எடுக்கவில்லை …மற்றொரு சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் என்பவர் ஆம்புலன்ஸ் நம்பரை கொடுத்தார் .நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம் என தகவல் எனினும் 108க்கு தகவல் கொடுத்தோம்.. நாங்கள் கேசில் உள்ளோம் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவோம் என்று சொன்னார்கள்..அவா்களும் வரவில்லை.மாதம் சம்பளம் வாங்கிக் கொண்டு நாங்கள் தொணடாற்றுகின்றோம் எனக் கூறிக்கொள்ளும் அரசுப்பணியாளா்கள் யாரும் 2மணி நேரமாக சம்பவஇடத்திற்கு வரவில்லை. அதுவரை தோற்று பாதிக்கப்பட்டவரை சாலையில் வைக்கமுடியுமா கேள்வி. எனினும் தொலைபேசி வாயிலாக நடந்தவற்றை தெரிவித்தோம். மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியாளர். .வினைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சுறுசுறுப்பு அடைந்த மாநகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் துரித நடவடிக்கையால் தனியார் தொண்டு ஆம்புலன்ஸ் விரைவாக வந்தது நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக சாலையில் இருந்தவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சாலையில் இருந்தது மனவேதனை ஏற்படுத்தியது…..
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.