
சிவகங்கை அருகே உள்ள கொல்லங்குடியை சேர்ந்தவர் கலைமாமணி கருப்பாயி. கிராமிய பாடகியான இவர் ஆண்பாவம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற கெல்லங்குடி கருப்பாயி தனது குடும்பத்தினருடன் கொல்லங்குடியில் வசித்து வருகின்றார். இவர் நேற்று இரவு கொல்லங்குடியில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கி விட்டு சாலையை கடக்கும் போது இரு சக்கர வாகனம் மோதி விபத்தில் சிக்கினார். அதில் அவரது கால் எழும்பு முறிந்து காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே பொருளாதாரத்தில் மிகவும் சிரமபட்டு வந்த இவர், விபத்திற்கு பின் மருத்துவ செலவுக்கு அஞ்சி கால் கட்டு போட்டு வீட்டுக்கு அனுப்ப கேட்டு கொண்டு உள்ளார். கிராமிய பாடகி கலைமாமணி விருது பெற்றவர் மருத்துவத்துக்கு தற்போது பணம் இல்லாமல் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது பரிதாபத்துக்குறியது. தமிழக அரசும் தன்னார்வலர்களும் முதிய கிராமிய பாடகிக்கு உதவிக்கரம் நீட்டுவார்களா?
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.