
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்குத்தெரு பழங்காநத்தம் அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் மூச்சுத்திணறல் இருமல் உள்ளிட்டவை இருந்து வந்தது. இந்த நிலையில் இவரை காலை அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே அனுப்பி உள்ளார்கள் .என்ன செய்வது என்று தெரியாமல் சாலையில் ஓரத்தில் படுத்திருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் ஏன் படுத்து இருக்கிறீர்கள். வீட்டில் போய் படுக்க வேண்டி தானே என கேட்டதற்கு சற்று தள்ளி நில்லுங்கள் என்று அவர் சொல்லவே எனக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் மூச்சுத்திணறல் சளி இரும்பல் உள்ளது எனவும் இதனால் என்னை வீட்டில் இருந்து வெளியே அனுப்பியதாகவும் தகவல் சொன்னார்.
உடனடியாக அப்பகுதி மக்கள் சத்திய பாதை மாத இதழ் (கீழை நியூஸ்) மதுரை நிருபருக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த சத்திய பாதை மாத இதழ் மதுரை நிருபர் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். பின் அவர் படுத்திருந்த இடத்தில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் அவர் படுத்திருந்த இடத்தில் இங்கே படுக்க கூடாது எனவும் அந்த வீட்டின் உரிமையாளர் கூறியது மிகவும் வேதனையாக இருந்தது.பின் அருகில் உள்ள ஓர் இடத்தில் அவரை நிழலில் அமர செய்து ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது . மாநகராட்சி அதிகாரிகள் அவர் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சுகாதார மையத்தில் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளார்கள்.இவருக்கு தொற்று உள்ளதா என பரிசோதனை பின்னே தெரியவரும் என மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். தகவல் தெரிவித்த அரை மணி நேரத்திலேயே சாலையில் காய்ச்சலுடன் படுத்து இருந்து நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உரிய ஏற்பாடு செய்த சத்திய பாதை மாத இதழ் (கிழை நியூஸ்) மதுரை நிருபருக்கும் மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர் .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.