தெருவில் விடப்பட்ட மூதாட்டி … தேடி உதவிய உள்ளங்கள்…

மதுரை, திருப்பரங்குன்றம் ரோட்டில் 70 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் மழையில் நினைந்து, கிழிந்த உடையுடன், படுத்து இருந்தார். தெருநாய்கள் அவரையே சுற்றி, சுற்றி வந்தன. அதை பார்த்த மதுரை பழங்காநத்ததை சேர்ந்த ஜெயாஅழகேசன் என்பவர் நாய்களை விரட்டி விட்டு, அவருக்கு உணவு, குடிநீர் வாங்கி கொடுத்து விசாரித்தார். அந்த மூதாட்டி ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் எனவும், அவர் சண்முகம் என்பவரது மனைவி வள்ளிமயில், என்பதும், இவருக்கு ஒரு மகள் இருந்ததாகவும், அவரும் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதாகவும் தெரிய வந்தது.

மேலும் அவர் ஒரு அறக்கட்டளையில் இருந்ததாகவும், ஊரடங்கு காரணத்தால் அவர்கள் அறக்கட்டளையை மூடி விட்டு, திருப்பரங்குன்றம் மாநகராட்சி முதியோர் இல்லத்தின் முன்பு தனியாக விட்டு விட்டு சென்றதாகவும் கூறினார். தன்னால் எழுந்து உட்கார கூட முடியாததால், மாநகராட்சி முதியோர் இல்லத்தை சேர்ந்தவர்கள், தன்னை தர தர வென்று இழுத்து வந்து ரோட்டில் போட்டு விட்டு சென்றதாகவும், அதனால் முதுகு முழுவதும் புண்ணாக இருப்பதாகவும் கூறினார். அந்த மூதாட்டி தயவு செய்து என்னை இங்கே இருந்து கூட்டி சென்று விடுங்கள். உங்கள் வீட்டின் வெளியே ஓரத்தில் படுத்து கொள்கிறேன். இந்த நாய்களை பார்த்தால் ரொம்ப பயமாக இருக்கிறது என கதறி அழுதார். அவரை அப்படியே விட்டு விட்டு செல்ல மனம் இல்லாமல் தனது மகன் அகிலேஷ், மகள் கார்த்திகா ஆகியோரை வரவழைத்து கார் மூலம் அந்த மூதாட்டியை கலெக்டர் அலுவலகம் கூட்டி வந்தார். கலெக்டர் வினய் அவர்களுக்கு வாட்சப் மூலம் வீடியோஅனுப்பி அந்த மூதாட்டிக்கு உதவும்படி கேட்டு கொண்டார். கலெக்டர் . அவருக்கு உதவ செஞ்சிலுவை சங்கம் அமைப்பிற்கு உத்தரவிட்டார். செஞ்சிலுவை அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், வக்கீல்.முத்துக்குமார் ஆகியோர் அந்த மூதாட்டியை மாவட்ட சமூக நல துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று சமூக நல அலுவலர். ஜெயலட்சுமி மூலம் மதுரை. திருநகர். சுரபி (தாய் மடி இல்லத்தில் சேர்த்தனர்.. இரண்டு நாட்களுக்கு முன்னால் வீட்டு உரிமையாளர், வீட்டை விட்டு வெளியே விரட்டி விட்ட மூதாட்டியையும் இவர்கள் பராமரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..