Home செய்திகள் மதுரையில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தியதாக 5 பேர் கைது.

மதுரையில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தியதாக 5 பேர் கைது.

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே வெள்ளக்கல் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தியதாக அவனியாபுரம் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் , காவல்துறையினர் சார்பு ஆய்வாளர் காசி தலைமையில் வாகனத் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் வந்தவர்களை சோதனை செய்ததில் , அவர்கள் கஞ்சா கடத்தியது தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து 24 கிலோ கஞ்சா , 2.5 லட்சம் ரொக்கம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் , 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடத்தலில் ஈடுபட்டதிருப்பூர் மாவட்டம் செங்கம்பள்ளியை சேர்ந்த மொக்கராஜ் (எ) மொக்கையன் (51). மதுரை அவனியாபுரம் மாநகராட்சி காலனியை சேர்ந்த வீரமணி ( 26) , மதுரை ஆனையூரை சேர்ந்த பிரகாஷ் (27), தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த அஜீத் குமார்  (21), திருப்பூர் பெத்த நாயகன் பாளையத்தை சேர்ந்த நாகராஜன் (31) ஆகிய 5 பேரை கைது செய்து அவனியாபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் , மேலும் தலைமறைவான 7 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.குற்றவாளிகளிடமிருந்து இரண்டு பைக்குகள் ஒரு கார் உள்பட பணம் ரூபாய் 2.5 லட்சம் . மற்றும் 24 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com