Home செய்திகள் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தடையை மீறி கிரிவலம் சென்றதால் பரபரப்பு

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தடையை மீறி கிரிவலம் சென்றதால் பரபரப்பு

by mohan

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.மத்திய அரசு மற்றும் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அறிவித்திருந்த நிலையிலும் கோயில்கள், மசூதிகள் மற்றும் கிறிஸ்துவ தேவாலயங்கள் என ஆன்மீகம் சார்ந்த கோயில்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை.ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறவிருந்த பவுர்ணமி கிரிவலம் கொரோனா ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்படுவதாக பு நாட்களுக்கு முன்பாகவே கோயில் நிர்வாகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

இருந்தபோதிலும் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர்.இதில் சமூக இடைவெளி, முக கவசம் இன்றி சென்ற பக்தர்கள் பூட்டப்பட்டிருக்கும் கோயில் வாசலிலும், திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் விளக்கு ஏற்றியும் பிரார்த்தனை செய்து செல்கின்றனர்.கொரோனா நோய் தொற்று பரவி வரும் வேளையில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கிரிவலம் சென்று வருவதால் திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com