Home செய்திகள் கொரோனா நோய்த்தொற்றுக்கு மதுரை மூதாட்டி பரிதாப சாவு.பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

கொரோனா நோய்த்தொற்றுக்கு மதுரை மூதாட்டி பரிதாப சாவு.பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

by mohan

மதுரை மேல அனுப்பானடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனி பகுதியை சேர்ந்த 72 வயது மூதாட்டிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.இதையடுத்து அவர் மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இதில் அவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடந்தது. இருந்த போதிலும் மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

மதுரை அரசு மருத்துவமனையில் அண்ணாநகர் முதியவர், மேலமாசிவீதி மூதாட்டி, கொட்டாம்பட்டி அடுத்த மங்கலக்குடி மூதாட்டி ஆகிய 3 பேர் ஏற்கனவே கொரோனா நோய் காரணமாக இறந்து உள்ளனர்.இந்த நிலையில் மேல அனுப்பானடி மூதாட்டி மரணம் காரணமாக, மதுரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com