Home செய்திகள் 45 நாட்களாக தவிக்கும் வடமாநில லாரி ஓட்டுனர்கள் மற்றும் கிளீனர்கள்

45 நாட்களாக தவிக்கும் வடமாநில லாரி ஓட்டுனர்கள் மற்றும் கிளீனர்கள்

by mohan

மகாராஷ்டிரா ஹரியானா பீகார் உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் பல்வேறு பொருட்களை எடுத்து வந்த வட மாநில லாரி ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் மதுரை பைபாஸ் சாலை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சுமார் 15க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளது. அவரிடம் நேரடியாக நாங்கள் விசாரித்த பொழுது 45 நாட்களாக நாங்கள் இங்கே சிக்கி தவித்து வருகிறோம் எனவும் மேலும் வாகனம் அருகிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது கொசுக்களும் மழையிலும் வெயிலிலும் காய்ந்து உணவு தண்ணீர் இல்லாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

தமிழக அரசு இதுவரை எங்களுக்கு எந்த விதமான உதவியும் செய்யவில்லை எனவும் தெரிவித்தனர். நாங்கள் லாரியை விட்டு எங்கும் செல்ல முடியாது என லாரியில் உள்ள பேட்டரிகள் மற்றும் டயர் உள்ளிட்ட உதிரி பாகங்கள் ஏதேனும் திருடு போய்விட்டால் மேலும் எங்களுக்கு சிக்கல் ஆகி விடும் அதனால் லாரி அருகேயே இருக்க வேண்டிய சூழ்நிலையும் உள்ளது எனவும் கழிவறை செல்வதற்கு இடம் இல்லாமல் தவித்து வருவதாகவும்  சாப்பாடு ஒருவேளை மட்டுமே எடுத்துக் கொள்வதாகவும் தமிழக அரசு எங்களுக்கு உணவு மற்றும் பாதுகாப்பு கொடுத்தால் சிறப்பாக இருக்கும் எனவும் அல்லது எங்களுக்கு வாகனங்களை எடுத்துச் செல்ல அனுமதி கொடுத்தால் நாங்கள் எங்களது சொந்த மாநிலத்துக்கு சென்று விடுவோம் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com