
ஐக்கிய அரபு அமீரகத்தில் நாட்டிற்காக உயிரை துறந்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் 30 அன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்து எமிரேட்களை சார்ந்த ஆட்சியாளர்கள் அபுதாபி சேக் சயித் மஸ்ஜிதின் எதிர்புரத்தில் அமைத்துள்ள “வகத் அல் கராமா” (Wahet Al Karama) “கண்ணியத்தின் சோலை” என்ற பெயரில் உருவாக்கப்பட்ட நினைவிடத்தில் அனைவரும் சங்கமித்தனர்.
46,000 சதுர மீட்டரில் அமைந்துள்ள 1000 அலுமினிய பலகைகளை கொண்ட பிரம்மாண்டமான நினைவிடத்தை அமீரகத்தின் பட்டத்து இளவரசரும்,துணை ஜனாதிபதியும் திறந்து வைத்தனர்.அந்த நினைவிடத்தில் தியாகிகளை பிரதிபலிக்கும் வகையிலும்,இன்னும் பல செய்திகளும் பொதிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் பார்வையிடும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்நிகழ்ச்சியின் துவக்க உரையில் பேசிய தரைப்படையின் கமாண்டர் கூறும் பொழுது: நாட்டின் சுதந்திரத்திற்கும், அமைதிக்கும் காரணமாக இருக்கும் தியாகிகளை நினைவு கூறுவதோடு நாமும் தியாகம் செய்ய முன்வர வேண்டும்.அவ்வாறு செய்வதன் மூலம் நம் வருங்கால தலைமுறை பாதுகாப்பான சூழலில் வாழ முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.