Home செய்திகள்மாநில செய்திகள் புதிய சாலை அமைப்பதற்காக 300 மரங்கள் வெட்டப்பட்டதாக சுற்றுச்சூழல் சமூக ஆர்வலர்கள் நீதியரசர்களிடம் புகார்.

புதிய சாலை அமைப்பதற்காக 300 மரங்கள் வெட்டப்பட்டதாக சுற்றுச்சூழல் சமூக ஆர்வலர்கள் நீதியரசர்களிடம் புகார்.

by Askar

புதிய சாலை அமைப்பதற்காக 300 மரங்கள் வெட்டப்பட்டதாக சுற்றுச்சூழல் சமூக ஆர்வலர்கள் நீதியரசர்களிடம் புகார்.

திருப்பரங்குன்றம் ஜி எஸ் டி சாலையில் அமைந்துள்ளது தென்கால் கண்மாய்.

சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் பொதுப்பணி துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. திருப்பரங்குன்றம் பகுதி விவசாயம் மற்றும் குடி நீர் ஆதாரமாக விளங்கும் இந்த கண்மாய் கரையின் கிழக்கு பகுதியில் உள்ள சாலையை ஒட்டிய பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வாகன போக்குவரத்திற்காக புதிய சாலை அமைக்க ரூ.41.89 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பசுமலை மூலக்கரை அருகில் இருந்து திருப்பரங்குன்றம் பை-பாஸ் ரோடு சந்திப்பு வரை 1.2 கி.மீ. தூரம் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த சாலை அமைக்கும் பணிக்காக தென்கால் கண்மாயில் உள்ள மடை மற்றும். நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வருவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சுவாமிநாதன, புகழேந்தி, தண்டபாணி ஆகியோர் தென்கால் கண்மாயில் சாலை அமையும் இடத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் .

அப்போது உடன் நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் இப்பகுதியை சேர்ந்த தன்னார்வல அமைப்பினர் இந்த சாலைக்காக சுமார் 300 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதாக நீதிபதிகளிடம் மனு அளித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com