100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அகத்தாப்பட்டி கிராமத்தில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு பிறகு 16 ஆண்டுகள் கழித்து தற்போது மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில், குடங்களில் நிரப்பி வைக்கப்பட்ட தீர்த்தங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வேத, விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க பூஜிக்கப்பட்டு மேள, தாளத்துடன் ஸ்ரீகிருஷ்ணன் கோவில் மேல் அமைக்கப்பட்டுள்ள கும்பத்திற்கு மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. பூஜிக்கப்பட்ட கலச தீர்த்தங்களை அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது.
இவ்விழாவில் கள்ளிக்குடி, டி. கல்லுப்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமப் புறங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் மேற்கொண்டனர். விழாவையொட்டி கூடியிருந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.