Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கொரோனா பாதிப்பு.. வரலாற்று சிறப்புமிக்க சித்திரை திருவிழாவும் பாதிப்பு… மதுரை ஆணையர் சுற்றறிக்கை..

கொரோனா பாதிப்பு.. வரலாற்று சிறப்புமிக்க சித்திரை திருவிழாவும் பாதிப்பு… மதுரை ஆணையர் சுற்றறிக்கை..

by ஆசிரியர்

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தற்போது நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சார்வரி வருடம் சித்திரை பெருவிழா வருகிற 25/04/2020 தொடங்கப்பட வேண்டிய கொடியேற்றம், தினமும் நடைபெறும் வைபவங்கள், சுவாமி திருவீதி உலாக்கள், பட்டாபிஷேகம், திக்கு விஜயம், திருக்கல்யாண உற்சவம் மற்றும் திருத்தேரோட்ட நிகழ்ச்சிகள் நடைபெறாது எனத் தெரிவிக்கப்படுகிறது .

அனைத்து பக்தர்களின் பிரார்த்தனையை நிறைவேற்றும் வகையிலும், பக்தர்களின் ஆத்ம திருப்திக்காவும் தலபுராணத்தின்படி, திருக்கல்யாண சம்பிரதாயங்கள் மட்டும் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளுடன் சேர்த்து 04/05/2020 தேதி திங்கட் கிழமை அன்று காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் அமைந்துள்ள எப்பொழுதும் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியுள்ள சேத்தி மண்டபத்தில் உற்சவர் சன்னதி நான்கு சிவாச்சாரியர்கள் மட்டும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தி வைப்பார்கள்.

மேற்படி நிகழ்வினை அனைத்து பக்தர்களும் கண்டு பிரார்த்திக்கும் வகையில் திருக்கோயில் இணையதளம் www.maduraimeenakshi.org மூலம் திருக்கல்யாண நிகழ்வினை நோடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி திருகல்யாண வைபம் உற்சவத்தின்போது “திருமாங்கல்ய மங்கல நாண் – திருமணமான பெண்கள் புதிதாக அணிந்து கொள்வதான மரபு உள்ளது, அவ்வாறு அணிந்து கொள்ள விரும்பும் தாய்மார்கள் காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் தங்கள் இல்லத்திலேயே பிரார்த்தித்து புதிய மங்கலநாண் மாற்றிக்கொள்ள உகந்த நேரம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு நடராஜன் , இணை ஆணையர் பத்திரிக்கையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com