தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

செம்பனார்கோவில் மேலமுகட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் செம்பை ஒன்றிய செயலாளர் ஆர். முருகன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மின்சார திருத்த சட்டம் மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், அத்தியாவசியப் பொருட்களின் திருத்தச்சட்டத்தையும், மத்திய அரசு வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம் திரும்பப் பெற வலியுறுத்தியும், விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செம்பை  ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பகத்சிங் மற்றும் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்