Home செய்திகள் திருக்கடையூரில் பா.ஜ கட்சியில் இருந்து விலகி திமுகவில் ஸ்டாலின் தலைமையில்     இணைந்தனர்

திருக்கடையூரில் பா.ஜ கட்சியில் இருந்து விலகி திமுகவில் ஸ்டாலின் தலைமையில்     இணைந்தனர்

by mohan

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி  தாலுக்கா திருக்கடையூரில் பாரதிய ஜனதா கட்சி, அதிமுக,  உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா முருகன்  ஆகியோர் முன்னிலையில் பாரதிய  ஜனதா கட்சியின் நாகை வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் அமிர்த விஜயகுமார் தலைமையில் பாஜக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியிலிருந்து விலகி 500-க்கும் மேற்பட்டோர்    திமுக வில் இணைந்தனர். இதற்கான இணைப்பு விழா திருக்கடையூரில் திமுக தலைவர்  மு. க. ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி நடைபெற்றது.

காணொளி நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு. க. ஸ்டாலின்  கொரானா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக பொதுமக்கள் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். தொழிலாளர்களுக்கு  ஐந்தாயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை .ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய மாநில அரசுகள் எந்தவித உதவியும் செய்யவில்லை,கரோனா  அளவைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை .நாகை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகளுடன், தொண்டர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள் என்று பேசினார்.நிகழ்ச்சியில் நாகை மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சித்திக், பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் அப்துல்மாலிக், அன்பழகன், ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றிய துணை பெருந்தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!