பாஜகவினர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழலை கண்டித்து முற்றுகை போராட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு பகுதியில் அமைந்துள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழலை கண்டித்து 300-க்கும் மேற்பட்ட பாஜகவினர் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.மயிலாடுதுறை மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளது. விவசாயிகளிடமிருந்து நெல்லை வாங்கும் போது 40 கிலோ எடைகொண்ட மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு கொள்முதல் செய்வதோடு மட்டுமல்லாது, 40 கிலோ எடைக்கு பதிலாக 42 கிலோ எடையை எடுத்துக் கொள்கின்றனர்.

கொள்முதல் நிலையங்களில் முறைகேடாக பெரும் தொகையை அலுவலர்கள் வரை பங்கு பிரித்துக் கொள்வதால் ஊழல் முறைகேட்டை அலுவலர்கள் கண்டுகொள்வதில்லை.மேலும், கோமல் நெல் கொள்முதல் நிலையத்தில் நடைபெறும் முறைகேட்டை தட்டிக்கேட்ட பாஜக பிரமுகர் மீது பொய் வழக்கு போட்டதை கண்டித்தும், கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை களைய கோரியும் மாவட்ட பாஜக சார்பில் சித்தர்காடு பகுதியிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பாக பாஜக கட்சியினர் 300-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..