கலைஞர் உருவப்படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, செம்பனார்கோவில் ஆகிய பகுதிகளில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதிக்கு இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாப்பிள்ளை அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதி  உருவப்படத்திற்கு நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா முருகன் தலைமையில் மயிலாடுதுறை சீர்காழி செம்பனார்கோயில் குத்தாலம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் செம்பனார்கோயில் ஒன்றிய செயலாளர்கள் பி.எம் .அன்பழகன்,அப்துல்மாலிக், ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  அருள்செல்வன்,நாகை மாவட்ட தகவல் தொடர்பு அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து திருக்கடையூர், ஆக்கூர், சங்கரன்பந்தல், ஆயப்பாடி ஆகிய பகுதிகளில் மு. கருணாநிதி உருவப்படத்திற்கு    நாகை வடக்கு மாவட்டம் திமுக பொறுப்பாளர் நிவேதா முருகன்,மற்றும் கட்சி நிர்வாகிகள்  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.அதைத்தொடர்ந்து   2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன .

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..