மேல் பள்ளிப்பட்டு அரசு பள்ளியில் மாணவர்களுக்கு உலர் இணை உணவு வழங்கல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு அரசு பள்ளியில் மாணவர்களுக்கு உலர் இணை உணவுழங்கப்பட்டது. இந்நிகழ்விற்குஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மேல் பள்ளிப்பட்டு அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உலர் இணை உணவுப் பொருட்கள்ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பானுமதி ஜம்புலிங்கம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் வழங்கினார். நிகழ்வில் மேல் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய துனைத்தலைவர் முத்துகுமார், அனைத்து வார்டு கவுன்சிலர்கள் , திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதேபோல் செங்கம் அடுத்தகண்ணக்குருக்கை அரசு பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.செங்கம் ஒன்றியம் கண்ணக்குருக்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல் திட்டத்தின் கீழ் அரிசி பருப்பு போன்றவை மாணவர்களின் பெற்றோர்கள் வசம் வழங்கப்பட்டது நிகழ்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மண்ணம்மாள் தலைமை தாங்கினார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் அதிமுக ஒன்றிய அம்மா பேரவை செயலாளருமான கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். ஊராட்சி ஒன்றிய சத்துணவு மேலாளர் அண்ணாமலை அரிசு பருப்புகளை வழங்கினார்.

செங்கம் செய்தியாளர் சரவணகுமார்

உதவிக்கரம் நீட்டுங்கள்..