Home செய்திகள்உலக செய்திகள் சொந்த காசில் உலகிற்கே சூனியம் வைத்து விட்டதா சைனா?

சொந்த காசில் உலகிற்கே சூனியம் வைத்து விட்டதா சைனா?

by mohan

கொரோனா வைரஸ்:

உலகம் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது.தன்வினை தன்னைச்சுட்டது.சீனாவில் துவங்கி உலகம் முழுதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உருவாக சீனாவின் உயிரி ஆயுத ஆய்வகமே காரணம் என்ற தகவல் பரவி வருகிறது.

உலகில் பல நாடுகள் இரும்புத்திரை நாடுகளாக இருந்தன. தொழில்நுட்ப முன்னேற்றம் பல நாடுகளின் இரும்புத்திரைகளை உடைத்து விட்டன. இதுவரை உடையாமல் இருக்கும் முக்கிய 2 இரும்புத்திரை நாடுகள் சீனாவும், வடகொரியாவும்.

வடகொரியா சிறிய நிலப்பகுதி. மக்கள் தொகையும் குறைவு. எனவே நிர்வகிப்பது சுலபம். ஆனால் சீனா பிரம்மாண்ட நிலப்பரப்பை கொண்டது. மக்கள் தொகையும் மிகவும் அதிகம். இருப்பினும் சீனாவில் இருந்து அரசு அனுமதியின்றி எந்த தகவலும் வெளியே வராது. இணைதள தேடுபொறி, பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட அனைத்துமே சீனாவுக்கென தனியாக உள்ளன.அப்படிப்பட்ட நாட்டில் இரு தான் இந்த கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

தன் நாட்டு செய்தி பரவுவதை தடுக்க முடியும் சீனாவால் …. ஆனால் இந்த வைரசை தடுக்க முடியாமல் தவிக்கிறது சீனா. இதில் பல விஷயங்களை சீனா வெளியிடாமல், வெளிவர விடாமல் தடுத்து வருகிறது. பலர் உயிரிழந்த பின், 2 நாட்களுக்கு முன் தான் வேறு வழியின்றி வைரசின் நுண்ணோக்கி வடிவத்தை சீனா வெளியிட்டது. அது வெளிவந்த பின் தான் பல அதிர்ச்சிகரமான விஷயங்கள் வெளிவர துவங்கியுள்ளன.இந்த வூகான் மாகாணத்தில் உயிரி ஆயுத (பயோ வெப்பன்) ஆய்வு மையத்தை சீனா நடத்தி வருகிறது. குண்டு சத்தமின்றி வெறும் உயிரி தாக்குதல் மூலம் பிற நாட்டை அழிப்பதற்கான ஆராய்ச்சி அது. சுருக்கமாக சொல்வதென்றால் ‘தசாவதாரம்’ படத்தில் குப்பியை சாப்பிட்டவுடன் வளர்ப்பு குரங்கு கரையுமே அது தான்.

இது முக்கியமாக இந்திய ராணுவத்தை குறி வைத்து தான் தொடங்க பட்டதாக என் எண்ணம் ,, டோக்கலாம் பிரச்சனையில் இந்தியாவிடம் பின் வாங்கிய பிறகு இந்தியா மீது கடும் வன்மமாக இருக்கிறது சீனா…ஏற்கனவே சீனா மீது உலக நாடுகளுக்கு சந்தேகம் உண்டு. வூகான் ஆய்வு மையம் பற்றிய கேள்வி எழும்போதெல்லாம், ‘அது உயிரி ஆயுத ஆய்வகம் அல்ல, உயிர்க்கொல்லி நோய் தடுப்பு மருந்து ஆய்வகம்’ என சீனா பதிலளித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

ஏற்கனவே சார்ஸ், எபோலா வைரஸ்கள் பரவிய போதும் சீனா மீது சில நாடுகள் சந்தேகம் தெரிவித்தன. ஆனால் தனக்கு இருக்கும் மிருக பலத்தால் அனைத்தையும் சீனா முனை மழுங்கச் செய்தது.ஆனால் இப்போது நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதால் விஷயத்தை கசிய விடுகிறது. யாராவது இதற்கு தடுப்பு மருந்து கண்டு புடித்து விட மாட்டார்களா என்று ஏங்கி தவிக்கிறது சீனா அதனால் தான் விஷத்தை கசிய விடுகிறது

#சீனபுத்தாண்டு

மேலும் வைரஸ் உருவாகியிருக்கும் காலமும் அதற்கு சிக்கலாகி விட்டது.சீன புத்தாண்டு ஜன.25ல் கொண்டாடப்படும். இதற்காக உலகமெங்கும் உள்ள சீனர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவர். இந்த சூழலில்தான் கொரோனா பரவியது. வந்தவர்களை வெளியேற விட்டால் உலகம் முழுதும் பரவி விடும்.சீனாவில் இருந்து வரும் விமானங்களை அனைத்து நாடுகளும் நிறுத்தி விட்டன.. எந்த சீனர்களும் அந்த நாட்டுக்குள் போனால் திரும்பி எந்த நாடும் ஏற்காது,, இதனால் போக முடியாது வரவும் முடியாது என்ற நிலை சீனர்களுக்கு உருவாகி விட்டது,, ஒவ்வொரு நாட்டிலும் சீனர்களை கண்டு விலகி ஓடும் நிலைக்கு மக்கள் வந்து விட்டனர். இதனால் சீனாவிற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது

#வைரஸ்உருவானதற்கு

முதல் கட்ட நடவடிக்கையாக, ‘வைரஸ் உருவானதற்கு வவ்வால் காரணம்’ என கூறி வூகான் சந்தையை முதலில் மூடியது. இருப்பினும் வைரஸ் அசுர வேகத்தில் பரவவே வூகானுக்கு அவசரம் அவசரமாக ‘சீல்’ வைத்தது.நேற்றைய நிலவரப்படி 910 பேர் பலியாகியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. ‘ஆனால் பலி எண்ணிக்கை லட்ச கணக்கில் இருக்கும் என்கின்றன உலக நாடுகள்.2 நாட்களுக்கு முன்பு கெரோனா வைரசின் நுண்ணோக்கி படம் வெளியானதும், ஆஸ்திரேலியாவில் உள்ள உயிர்க்கொல்லி வைரஸ் தடுப்பு ஆராய்ச்சி மையம் அதை போன்ற வைரசை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து தயாரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா கட்டுக்குள் வருமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

#தொடர்ந்து குழப்பும் சீனா

கொரோனா தன் ஆய்வகத்தில் இருந்து தான் வந்தது என்றால் உலகத்தில் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் ,‛கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள 9 நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்தோம் . அதில் வவ்வால்களின் மரபணுக்கள் காணப்படுகின்றன. சார்ஸ் வைரசின் மரபணுவும் உள்ளது.வூகான் மாகாணத்தில் உள்ள ஹூவானன் கடல் உணவு சந்தையில் விற்கப்பட்ட வவ்வாலில் இருந்து தான் இந்த வைரஸ் பரவியுள்ளது. என சீன ஆய்வாளர்கள் அறிக்கை வெளியிட்டனர்.ஆனால் சம்பந்தப்பட்ட 9 நோயாளிகளும் அந்த சந்தைக்கு சென்றவர்கள் இல்லை. வேறு நபர்கள் மூலம் இவர்களுக்கு பரவியுள்ளது’ என குறிப்பிட்டுள்ளனர். நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாரிடம் இருந்து பரவியது என்பதை ஆய்வாளர்கள் வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#தெருக்களில் உடல்

பொழுது விடிந்தால் தெருக்களில் பிணங்கள் கிடப்பது சகஜமாகி விட்டது,, யாருக்கும் தெரிந்து விட கூடாது என்பதால் விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் ஆம்புலன்ஸ் வந்து அள்ளி கொண்டு போகும் நிலை நடந்து வருகிறது.இதனால் வூகான் நகரில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அங்கிருக்கும் அனைவரும் உடல் கவசம் அணிந்தே சென்று வருகின்றனர். இருநாட்களுக்கு முன் அங்குள்ள கடை முன் 60 வயது மதிக்கத்தக்க முகமூடி அணிந்த ஒரு நபரின் சடலம் கிடந்தது. இவர் கொரோனாவிற்கு பலியானவர்தான் என கூறப்படுகிறது. முகமூடி அணிந்தவரும் இந்த நோய்க்கு தப்பவில்லை என்பது தான் கொடுமை.இதனால் வூகான் நகருக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள நிலையில் ஆம்புலன்ஸ்கள் சென்று வந்த வண்ணம் உள்ளன. மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. 2 நாட்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

2 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை

#அமெரிக்காவின் மேரிலாந்தில் உயிரி பாதுகாப்பு மையம் உள்ளது. இதன் ஆலோசகர் டிம் ட்ரெவன், 2017 ம் ஆண்டே சீனாவின் உயிரி ஆராய்ச்சி மையம் குறித்து எச்சரிக்கையை வெளியிட்டார். ‘வூகானின் ஆய்வு மையத்தில் உலகத்தரத்திலான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. வைரஸ்கள் கசிய அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி வெளியேறினால் உலகம் முழுதும் பாதிக்கப்படும்’ என்றார்.

#இஸ்ரேல் ; இதை உறுதி செய்யும் விதத்தில் இஸ்ரேல் ராணுவ புலனாய்வு பிரிவு முன்னாள் அதிகாரியான டேனி ஷோஹம் அளித்த பேட்டியில், ‘வூகான் ஆராய்ச்சி மையத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என்பது எனது உறுதியான கருத்து’ என்றார்.’சார்ஸ், எபோலா’ என்ற வைரஸ்கள் இந்த ஆய்வகத்தில் இருந்து வெளியேறியதை ஏற்கனவே உலக ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். எச்சரிக்கையும் செய்துள்ளனர்.வூகானில் துவங்கிய கொரோனா பயணம் பீஜிங், ஷாங்காய் நகரங்களிலும் தொடர்கிறது. இதனால் ஒட்டு மொத்த சீனாவே உறைந்து நிற்கிறது.அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவி வருகிறது.

சார்ஸ், எபோலா’ என உயிர்க்கொல்லி வைரஸ்கள் இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை. ‘அதே போன்று தான் கொரோனாவும்’ என்கின்றனர் மருத்துவர்கள். இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் தட்பவெப்ப நிலை. இங்கு நிலவும் கடும் வெப்பம் எந்த வைரசையும் சுட்டெரித்து விட கூடியது.கொரோனா வைரசால் சீனாவில் இருந்து சென்ற ஜப்பானியர்கள் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கர்கள் 200 பேர் தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில் அறிகுறி எதுவுமின்றி கொரோனா பாதிக்கும் என்ற தகவல் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சீன தம்பதி சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினர். அவர்களது 10 வயது மகன் எந்த பாதிப்பும் இன்றி இருந்தார். இருப்பினும் அவருக்கு சோதனை செய்யுமாறு பெற்றோர் வலியுறுத்தினர்.சோதனையில் அந்த சிறுவனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதியானது. ஆனால் நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லை. இந்த தகவல் உலகம் முழுவதையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.மனித குல வரலாற்றில் சக மனிதனை அழிக்கும் யுக்தியை மனிதன் வளர்த்து கொண்டான் விளைவு மனித குலத்துக்குத்தான் அழிவு.இனி வடகொரியா என்ன வச்சிருக்கான் என்று தெரியவில்லை அதனால் உலகம் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது என்பது தான் உண்மை …

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com