Home செய்திகள் கொரானாவிற்கு மருந்து என்னிடம் உண்டு, சித்த மருத்துவர் தனிகாசலம்:- மருத்துவரிடம் பகிரங்கமாக சில கேள்விகள் கேட்கும் சமூக ஆர்வலர் தக்கலை ஆட்டோ கபீர்..

கொரானாவிற்கு மருந்து என்னிடம் உண்டு, சித்த மருத்துவர் தனிகாசலம்:- மருத்துவரிடம் பகிரங்கமாக சில கேள்விகள் கேட்கும் சமூக ஆர்வலர் தக்கலை ஆட்டோ கபீர்..

by Askar

டாக்டர் தணிகாசலம் என்பவர்…

எத்தனை கொரானா நோயாளிக்கு மருத்துவம் பார்த்தார்.??

எந்த மருந்தை கொடுத்து வைத்தியம் பார்த்தார்.??

அரசுக்கு அந்த மருந்தினை பற்றிய விவரங்கள் தெரிவித்தாரா..?

இவர் கொடுத்த மருந்தின் mechanism of action, dose மற்றும் side effects பற்றி data களை அரசுக்கு கொடுத்தாரா.??

அதில் எத்தனை கொரானா நோயாளிகள் குணமடைந்தார்கள்.?

இவர் வைத்தியம் பார்த்த கொரானா நோயாளிகள் யார்.? யார்.?

இவர் வைத்தியம் பார்த்த கொரானா நோயாளிகள் எந்த நாட்டிலிருந்து வந்தவர்கள்.??

தமிழக சுகாதாரதுறைக்கு இவர் வைத்தியம் பார்த்த கொரானா நோயாளி பற்றிய விபரம் கொடுத்தாரா.??

ஆகிய விபரங்களை இவர் சான்றுகளோடு கூறவேண்டும்..

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆண்களுக்கே உண்டான இயற்கையான சில வீக்னஸை பயன்படுத்தி லேகியம் விற்ற சித்த மருத்துவரில் இவரும் ஒருவர்.

டாக்டர் காமராஜ், டிவி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று ஆண்கள் மற்றும் பெண்கள் மற்றும் தாம்பத்திய ரீதியான சந்தேகங்களை அறிவுபூர்வமாகவும், மருத்துவ ரீதியாகவும் விளக்கம் கொடுத்த பின்பு இது போன்ற லேகியம் டாக்டர்கள் காணாமல் போனார்கள்.

நெட் வசதி, வாட்சப், பேஸ்புக், டிவிட்டர் போன்ற வலைதளம் இல்லாத காலத்தில், தீராத நோய்கள் தீர்ந்திடும், பாலியல் நோய்க்கு விடுதலை, கிட்னி பெயிலியர், மாரடைப்பு, கேன்சர் என கொடும் நோய்கள் மூன்றே மாதத்தில் தீர்ந்து விடும் என…

பிரிண்டிங் பிரஸ்ஸில் மஞ்சள் நோட்டிஸ் அடித்து பஸ்களிலும், மக்கள் நடமாடும் இடங்களிலும் வினியோகித்து, மக்களின் அறியாமையை பயன்படுத்தி காசு சேர்க்க பல லேகியம் டாக்டர்கள் உருவாகினர்.

ஆனால் இப்போது அலோபதி மருத்துவர் தரும் மெடிசனை கூட நெட்டில் சர்ச் செய்து அந்த மருந்தின் முழுவிபரத்தை அறிபவர்களாக பொது மக்கள் முன்னேறியுள்ளனர்.

இதனால் பல லேகியம் டாக்டர்கள் காணாமல் போனார்கள், அப்படி சித்த மருத்துவர் தணிகாசலமும் காணாமல் போகிவிடகூடாது என நினைத்திருப்பாரே என்னவோ.??

இவர் சந்தர்ப்பம் பார்த்து தன்னை பிரபலபடுத்துகிறார். இதன் மூலம் மக்களின் பார்வை தனது மருத்துவமனை மீது பட முயற்சிக்கிறார்..

வல்லரசு நாடுகளே, கொரானாவை ஒழிக்க மண்டையை பிச்சிகிட்டு மருந்து கண்டு பிடிக்கும் ஆய்வில் உள்ளது.

இவர் உள்ளூரிலிருந்து புதுவகையாக வியாதிக்கு ஏற்கனவே மருந்து கண்டு பிடித்துள்ளேன் என சவடால் விட்டு கொண்டிருக்கிறார்.

இது போன்றவர்களிடம் எயிட்சுக்கும் மருந்து உண்டு என்று சொல்வார்., நீங்களாகவே கொரானா அல்லாமல் மடோனா என்ற வைரஸ் தாக்கியுள்ளது என இவர்களிடம் போனால் அதற்கும் மருந்து எங்களிடம் உள்ளது என கூறினாலும் கூறுவார்.

கொரானா என்பது உயிர் சார்ந்த விசயம் என்பதால், அரசு எதை கூறுகிறதோ, அரசு எதை அங்கிகாரம் கொடுக்கிறதோ, அரசு எதை செயல்படுத்துகிறதோ அதற்கு மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்..

ஆகவே இந்த ரத்னா சித்த மருத்துவனை திருத்தணிகாசலம் கூறிய வீடியோ பதிவை மற்ற தளங்களுக்கு பகிரவேண்டாம்.

குறிப்பு (Edited) : நான் இங்கு சித்த மருத்துவத்தையோ, ஆயுர்வேதிக் மருத்துவத்தையோ குறை கூறவில்லை, எனது குற்றசாட்டு தணிகாசலம் என்பவர் கூறும் கொரானா வைரஸுக்காக மருந்து உள்ளது என கூறும் பொய் செய்திக்கு தான் இந்த பதிவு.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com