Home செய்திகள் கொடைக்கானலில் தமிழ்நாடு பிரஸ் &மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியனுடன் இணைந்து காவல்துறை தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி..

கொடைக்கானலில் தமிழ்நாடு பிரஸ் &மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியனுடன் இணைந்து காவல்துறை தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி..

by ஆசிரியர்

கொடைக்கானலில் தமிழ்நாடு பிரஸ் &மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் கொடைக்கானல் காவல் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து  மாபெரும் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நீதிமன்ற தலைக்கவச உத்தரவை அடுத்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் உத்தரவின் பேரில் கொடைக்கானல் காவல் துணைகண்காணிப்பாளர் பொன்னுசாமி  தலைமையில் தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து மூஞ்சிக்கல் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கையில் விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தி சுமார் 700 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட மாபெரும் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியை கொடைக்கானல் வருவாய் கோட்டாச்சியர் மற்றும் தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் மாநில அமைப்புச் செயலாளர் கா. ரபீக் அஹமது கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்சியில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சு. பாண்டித்துரை திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீ. ஆனந்த் கோடை ரஜினி முருகேசன், மாவட்ட செய்தி தொடர்பாளர் பெ.முத்துபாண்டி,  சமூக ஆர்வலர் பேத்துபாறை மகேந்திரன் மற்றும் அனைத்து காவலர்கள் மற்றும் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள், குதிரை ஓட்டுனர்கள் முதன்முறையாக குதிரையில் தலைக்கவசம் அணிந்து ஊர்வலமாக அண்ணாசாலை வழியாக கே ஆர் ஆர் கலையரங்கம் வந்தடைந்தது.

பின்பு அனைவருக்கும் கொடைக்கானல் காவல் துணைகண்காணிப்பாளர் பொன்னுசாமி கூறியதாவது கண்டிப்பாக இரண்டு சக்கர வாகனத்தில் இருவரும் தலைக்கவசம் அணியவேண்டும். செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது நான்கு சக்கர வாகனத்தில் சீட்பெல்ட் அணியவேண்டும் என்று கூறினார் பின்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது. இதன் பின்னர் தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியனுக்கு கொடைக்கானல் காவல் துணைகண்காணிப்பாளர் பொன்னுசாமி  காவல்த்துறை சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com