Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை நகராட்சி நிர்வாகம் ஆணையரின் ஆணைப்படியா?? அலுவலரின் இஷ்டப்படியா??

கீழக்கரை நகராட்சி நிர்வாகம் ஆணையரின் ஆணைப்படியா?? அலுவலரின் இஷ்டப்படியா??

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகள் மற்றும் அங்கு வரும் வாகனங்களுக்கு நிழைவு வரி வசூல் செய்ய   குத்தகை  விடப்பட்டுள்ளது. ஆனால் அங்குள்ள கடைகள், வாகனங்களுக்கு மட்டும் குத்தகை பணம் வாங்காமல் கீழக்கரை நுழைவு வாயிலில் ரோட்டில் நின்று ஊருக்குள் வரும் அனைத்து வாகனங்களுக்கும் முறையற்ற வகையில் குத்தகை பணம் வசூல் செய்வது பல காலமாக நடைபெற்று வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் கட்சிக்காரர்கள் என பலர் புகார்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை இல்லாமல் இந்த அநியாய வசூல் நடந்த வண்ணமே உள்ளது.

இந்த நிலையில் நாடெங்கும் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் மட்டும் கொண்டு வரவும், செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அசாதாரண சூழலிலும் இன்று (29.03.2020) வெளியூரில் இருந்து அத்தியாவசியப் பொருட்களான அரிசி ஏற்றி வந்த லாரியை வழிமறித்து குத்தகை பணத்தை அராஜகமான முறையில் வசூல் செய்துள்ளனர்.

இதுகுறித்து கீழக்கரை நகராட்சி ஆணையரிடம் புகார் அளிக்க சென்றால், நகராட்சி ஆணையர் பதில் சொல்லாமல் நகராட்சி இளநிலை உதவியாளர்  கார்திகேஸ்வரன் இடைமறித்து குத்தகை பணம் வாங்குவதில் தவறில்லை என்கிறார். இதே நிலைதான் கீழக்கரை மற்றொரு வியாபாரம் சம்பந்தமாக விசாரித்த பொழுது அந்த இளநிலை உதவியாளர் தாராளமாக செய்யுங்கள், யாராவது விசாரித்தால் என்னுடைய எண்ணை கொடுத்து பேச சொல்லுங்கள் என்கிறார்.  ஆனால் ஆணையரிடம் விசாரித்தலோ ஆட்சியரிடம் இத போன்ற உத்தரவு இல்லை என்கிறார்.

கீழக்கரை நகராட்சி ஆணையரின் ஆணைப்படி செயல்படுகிறதா இல்லை … இடைநிலை ஊழியரின் மேற்பார்வையில் நடைபெறுகிறதா?? கீழக்கரை ஆணையர் இந்த விசயத்தில் தலையிட்டு ஒரு தீர்க்கமான முடிவெடுத்து மக்கள் நலன் காப்பாற்றுவாரா??

தற்போது பொதுமக்களின் இந்த புகாரில் சிக்கியிருக்கும், இளநிலை ஊழியர் கார்த்திகேஸ்வரன், கீழக்கரை நகராட்சியில் கடந்த 12 ஆண்டுகாலமாக பணியாற்றி வருகிறார். இவர் மீது பல இலஞ்ச வழக்குகள் இராமநாதபுரம் இலஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திலும், வரி வசூல் மோசடி, நகராட்சி அலுவலக பணம் கையாடல், நகராட்சி ஆணையரின் கையெழுத்தை போலியாக போட்டு மோசடி உள்ளிட்ட வழக்குகள் நகராட்சிகள் மண்டல அலுவலகம் மதுரையிலும் இன்னும் நிலுவையில் உள்ளது. மேலும் பொதுமக்களிடம் இலஞ்சம் பெற்றே அலுவலக வேலைகளை இவர் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் இந்த இளநிலை ஊழியர் கார்த்திகேஸ்வரனை, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கீழக்கரை நகராட்சியில் இருந்து வேறு ஊருக்கு பணியிட மாறுதல் செய்வதோடு, சட்டப்படி இந்நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சட்ட விழிப்புணர்வு இயக்கம் மற்றும் கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகம் சென்னை எழிலகத்தில் இயங்கும் தமிழக நகராட்சிகள் நிர்வாக ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு கொடுத்துள்ளதோடு, தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கும் 80 க்கும் மேற்பட்ட புகார் மனுக்களையும் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நபர் மீது கீழக்கரை மக்கள் டீம் சார்பாகவும் புகார் அளிக்கப்பட்டிருப்பதை குறிப்பிடதக்கது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com