
கீழக்கரையில் இஸ்லாமியார்கள் அதிகமாக வாழும் பகுதியாக இருந்தாலும் இந்து மத சகோதரர்கள், கிறிஸ்தவ மத சகோதரர்கள் என பல சமுதாய மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். அதுபோல் இவ்வுலகை விட்டு மறைந்தவர்களை அடக்கம் செய்வதற்கென அனைத்து சமுதாயத்தினருக்கும் தனி வசதிகளும் உள்ளன. அதுபோல் கிறிஸ்தவ சமுதாயத்திற்கான அடக்கஸ்தலம் கீழக்கரை தட்டான் தோப்பு முருகன் கோயில் பின்புறம் அமைந்துள்ளது.
இந்த அடக்கஸ்தலத்தில் இருந்த கல்லறைகளும் உடைக்கப்பட்டு சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த கல்லறைக்கு பாதுகாப்பான சுற்றுச் சுவர் இல்லாத காரணத்தால் இந்த கல்லறைகள் யாரு வேண்டுமானாலும் எளிதில் செல்லக் கூடிய சூழ்நிலை உள்ளது. ஆகையால் பாதுகாக்கப்பட வேண்டிய இடத்தில் சமூக விரோதிகளும் தஞ்சம் அடைய வாய்ப்புள்ளது என அச்சமுதாய மக்கள் அச்சப்படுகிறார்கள்.
இந்த கல்லறை கீழக்கரை சி.எஸ்.ஐ சர்சுக்கு (Kilakkarai CSI Church) உட்பட்டதாகும். இது சம்பந்தமாக கிறிஸ்தவ சகோதரர் ஒருவர் கூறுகையில் “இது சம்பந்தமாக பல முறை நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் மனுக்கள் கொமுடுத்துள்ளோம் ஆனால் இதுவரை எந்த ஒரு தீர்வும் காணப்படாமலே உள்ளது” என்று ஆதங்கத்துடன் கூறினார்.
You must be logged in to post a comment.