Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் “கீழை தமிழ் இலக்கிய பேரவை” தொடங்க முயற்சி..

கீழக்கரையில் “கீழை தமிழ் இலக்கிய பேரவை” தொடங்க முயற்சி..

by ஆசிரியர்

கீழக்கரைக்கு என தனித்துவமும், பல வரலாற்று சிறப்புகளும் உண்டு, ஆனால் அந்த வரலாற்று சிறப்புகளை வெளி உலகுக்கு கொண்டு வரவும், திறமையாளர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக கீழக்கரையை சார்ந்த ஜஹுபர் அலி என்பவரால் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது இலக்கியம் என்று ஒரு வட்டத்திற்குள் இல்லாமல் அனைத்து வகையான திறமைகளையும் வெளி உலகத்துக்கு கொண்டு வந்து, இளைய தலைமுறையை ஊக்குவிக்கும் முயற்சியாகும்.

இது சம்பந்தமாக ஜஹுபர் கூறுகையில்’ “ இது பெரிய project என்பதால் இனி வரும் காலத்தில் கீழக்கரையில் அலுவலகம் அமைத்து இதற்கேன்று குழு அமைத்து செயல்பட ஒரு யோசனை இருக்கிறது. இதற்கு சில காலதாமதம் பிடிக்கும் இருப்பினும் முயற்சி செய்ய உள்ளோம். முயன்றால் முடியாதது ஏதும் இல்லை என்ற வாக்குக்கேற்ப கூடிய விரைவில் இந்த கீழை இலக்கிய தமிழ் பேரவை செயல்படுத்த நம்மவர்களின் ஒத்துழைப்பும் அவசியம்@ என்றார்.

இந்த இலக்கிய பேரவை: 1. விளையாட்டுகள் 2. கவிதை மற்றும் கட்டுரை 3. வரைபடம் (ஓவியம் ) 4.பேச்சு திறன் 5.சமூக சேவை மற்றும் சமூக ஆர்வம் 6. சுகாதாரம் சார்ந்த 7. நடனம் 8. பாடல்(நல்ல குரல் வளம்) மற்றும் பாடலாசிரியர்கள் 9. நடிப்பு மற்றும் இசை 10. வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் தொல்பொருள் 11. சிறு சிறு விஞ்ஞான கண்டுபிடிப்புகள் 12. எழுத்தாளர்கள் (நாவல்) 13. பத்திரிக்கை ஆசிரியர்கள் 14. ஆடைகள் வடிவமைப்புகள் 15. விவசாயம் மற்றும் தோட்டக்கலை 16. மரம் நடல் ஆர்வலர்கள் 17. முதலுதவி (first aid) சம்பந்தமான 18. சமையல் குறிப்புகள் 19. நகைச்சுவை நடிப்பு மற்றும் நகைச்சுவை பேச்சு மற்றும் இன்ன பிற திறமைகளை வெளிகொண்டு வர உதவி புரியும்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com