Home செய்திகள்கீழக்கரை செய்திகள் எப்படி இருக்க வேண்டும் கீழக்கரை??… இளைஞரின் ஆதங்க கவிதை… “எப்படி இருந்த நான்… இப்படி ஆயிட்டேன்…”

எப்படி இருக்க வேண்டும் கீழக்கரை??… இளைஞரின் ஆதங்க கவிதை… “எப்படி இருந்த நான்… இப்படி ஆயிட்டேன்…”

by ஆசிரியர்

டிசம்பர் 3, கீழக்கரை தினம் என்று ஊரின் பெருமையை பறைசாற்றி அனைவரும் கொண்டாடி வரும் வேளையில், “எப்படி இருந்த கீழக்கரை…. இப்படி ஆகிவிட்டதே….” என்று கவிதை வடிவில் கீழக்கரையை சார்ந்த அஹமது ஹீசைன் பின் சர்புதீன் என்ற இளைஞர் தன் ஆதங்கத்தை கவிதையாக வடித்துள்ளார்… இதோ தங்களின் பார்வைக்கு:-

கீழக்கரை நாள் என்று பெருமிதம் கொள்ளும் தோழமைகளே…! நாம் நம் கீழக்கரையை இழந்து விட்டோம் என்பது தான் நிதர்சனமான உண்மை..! இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..? ஆம் கீழக்கரையில் ஓடிய ஓடை எங்கே..? கீழக்கரையில் இருந்த குளங்கள் எங்கே…? தெருவுகளில் இருந்த பொது கிணறுகள் எங்கே..? வாழ தோப்பு .. தென்னந்தோப்பு.. புளியந்தோப்பு.. முந்திரி தோப்பு இவைகளை எங்கே தேடுவது..? கீரை தோட்டம் எங்கே..? மிளகாய் விளைச்சல் எங்கே..? செக்கடி எங்கே..? செக்கை இழுக்கும் நாட்டு மாடுகள் எங்கே..? மாட்டுப்பண்னை எங்கே.? விவசாயம் எங்கே..? நெய்தல் நிலத்தின் முன்னோடிகள் எங்கே..? மீன் வலை பின்னும் நல் கலைநயம் எங்கே..? முத்துக்குளிக்கும் முன்மாதிரியாக திகழ்ந்த சங்குளிகாரர்கள் எங்கே..?

(கீழக்கரையில் முதல் தெரு என்ற பெறுமிதமும் கடின உழைப்பிழும்,  அடங்காத வீரத்திலும் எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்ற மன்னிக்க தக்க பெறுமை சங்குளிகார தெருவையே சாரும்..! இதை இத்தருணத்தில் சொல்ல நான் கடமைபட்டுள்ளேன்..!)

கீழக்கரையில் எத்தனை  ஆலமரம், அரசமரம், அத்திமரம், பூவரசமரம், வாகமரம், வாவரசிமரம், மகிழமரம், பப்பரப்பளி மரம் இவைகள் எல்லாம் எங்கே ..? இதில் இனமே தெரியாமல் அழிந்து போன மரங்களும் உண்டு… இன்னும் சில அங்கும் மிங்குமாக ஒவ்வொன்று தென்பட்டாலும் அதுவும் அழிவின் விளிம்பில் தான்…! ஆரோக்கியமான கீழக்கரையின் இயற்கை எங்கே..? விசாலமான வீடுகள் எங்கே..? வீட்டு வாசலில் திண்னைகள் எங்கே..? வீட்டுக்குள்ளே முற்றம் எங்கே..? வீட்டின் பின்னே கொல்லபுறம் எங்கே..? கொல்லையிலே தென்னை மரம் எங்கே..? நொங்கு தின்ற கோந்தையில் வண்டி செய்த சிந்தனை எங்கே..? களிமண்ணால் பொம்மை செய்து விளையாடிய திறமை எங்கே..? தட்டான் (தும்பி) பிடித்து விளையாடும் போது கற்றுக்கொண்ட பொறுமையும் விடாமுயற்சியும் எங்கே..? பட்டுபூச்சை கையாண்ட மிருதுவான குணம் எங்கே…? மின்மினி பூச்சிகளோடு காதல் செய்த காலங்கள் எங்கே..? கபடி விளையாடும் ஜாம்பவான்கள் எங்கே..? கட்டுமஸ்தான ஆண்கள் எங்கே..? அழகழகாய் பாடல் பாடி வித விதமாய் விளையாடிய பெண்கள் எங்கே..? கடைசியாக ஒன்று கேட்கிறேன்..! எங்கே எமது கீழக்கரை..? எல்லாவற்றையுமே இழந்துவிட்டோம்..! கீழக்கரைக்கு புகழாரம் சூட்டும் நல்ளுள்ளங்களே! நீங்கள் செய்வது எப்படி இருக்கு தெரியுமா..? இறந்த குழந்தைக்கு பிறந்த நாளும்.. அடிமைகள் எல்லாம் சுதந்திர தினம் கொண்டாடுவது போல் தெரிகிறது..! நீங்கள் படித்தபடிப்பும் நவீன நாகரிகமும் வந்து எதை சாதித்தது..? உங்கள் நவீன நாகரிகத்தின் தாக்கத்தால் வள்ளல் சீதக்காதி சாலை என்பதை V.Sசாலை என்று கூறுகிறார்கள் சிலர்.! ஒன்றை மட்டும் சிந்தனையில் ஏந்தி கொள்ளுங்கள்..! நீங்கள் சுருக்கியமு எழுத்துக்களை மட்டும் அல்ல .! பல எழுத்தாளர்களின் ஏடுகளில் முத்திரை பதித்தவர்களின் வரலாற்றை என்பதை மறந்துவிட வேண்டாம்…! வரலாறு தெரியாதவன் வரலாறு படைக்கமாட்டான் என்பது சான்றோர் வாக்கு..! எனவே வரலாற்றை படிப்போம்..! வாழ்வியலை திரும்பபெருவோம்..! புதிய தோர் வரலாறு படைப்போம்..! இன்ஷா அல்லாஹ்..! இயன்ற வரை மரம் நடுவோம்..!🌳 மாற்றி அமைப்போம்..! பின்னர் போற்றி புகழுவோம் நமது கீழக்கரையை.! இவண் அஹமது ஹீசைன் பின் சர்புதீன்… கீழக்கரை..!

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com