Home செய்திகள் கீழக்கரை நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசாரமான விவாதம் !

கீழக்கரை நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசாரமான விவாதம் !

by Baker BAker

  

 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியின் நகர்மன்ற கூட்டம் நகராட்சி வளாகத்தில் நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் தற்காலிக ஆணையாளர் நஜிதா பர்வீன் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் ஹமீது  சுல்தான் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடிநீர் கழிவுநீர் சாலை உட்பட அடிப்படைத் தேவைகளை பற்றி விவாதிக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகம் சில மாதங்களாக அதிகாரிகள் பணிகளை முறையாக செய்யவில்லை என்றும் நகராட்சியில் பணியாளர்கள் குறைவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தில்லையேந்தல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் குப்பைகளை தீயிட்டு எரித்து வருவதாகவும் அவை கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் ஆஸ்துமா நோயாளிகள் இருப்பதால் இதை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் முறையாக நகராட்சி சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒன்னாவது வார்டு  கவுன்சிலர் தெரிவித்தார் . அதனைத் தொடர்ந்து  நாய்களின் தொல்லைகள் அதிகரித்து வருவதாகவும் நாய்களை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பதினாறாவது வார்டு கவுன்சிலர் தெரிவித்தார். பேருந்து நிலையம் அருகே மீன் மார்க்கெட் இடித்து புதிதாக கட்டுவதாக கூறி இன்று வரை அதை இடிக்காமல் இருப்பதால் அப்பகுதி குடிகாரர்கள் கூடாரமாக மாறி அப்பகுதியில் மது வியாபாரம் செய்வதாகவும் குடித்துவிட்டு அட்டகாசம் செய்து வருவதாகவும் அப்பகுதி பெண்கள் செல்வதற்கு அச்சப்பட்டு வருவதாகவும் நகராட்சி நிர்வாகம் அப்பகுதியை நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏன் என்றும்  பழைய கட்டிடம் இடிந்து விழும் தருவாயில் உள்ளது அப்பகுதியில் மக்கள் நடமாடும் பொழுது யார் மேலயாவது விழுந்து இறந்தால் தான் நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்களா என்று கேள்வியையும் மூணாவது வார்டு கவுன்சிலர் முன்வைத்து  தெரிவித்தார். கழிவுநீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்றும் பலமுறை கோரிக்கை வைத்தும் நகராட்சி நிர்வாகம்.நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருவதால் நகராட்சி நிர்வாகம் அனுமதி கொடுத்தால் என்னுடைய சொந்த பணத்தில் இருந்து என் மக்களுக்கு கழிவு நீர் தொட்டி அமைத்துக் கொடுக்க நான் தயாராக உள்ளேன் என்றும்  புரோக்கர்கள் அதிகரித்து வருவதாகவும் ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் தெரிவித்துள்ளார்.  ஆறாவது வார்டு பகுதியில் கழிவுநீர் தொட்டியின் மூடிகள் தரமற்ற நிலையில் போடப்படுவதால் வாகனங்கள் சென்று அவ்வப்போது உடைந்து விடுகிறது தரமான மூடிகள் அமைத்து தருமாறு கவுன்சிலர் கோரிக்கை வைத்தார். மக்களுக்கு அடிப்படை தேவைகளை நகராட்சி நிர்வாகம் முறையாக செய்ய வேண்டும் என்றும் பேங்க் பகுதியில் வாகன நெரிசல் அதிகரித்து வருவதால் அதையும் சரி செய்யப்பட வேண்டும் என்றும் 19 ஆவது வார்டு பகுதியில் பேவர் பிளாக் முறையாக அமைத்து தர வேண்டும் என்று கவுன்சிலர் கோரிக்கையை முன் வைத்தார்.  அதனைத் தொடர்ந்து 21 வது வார்டு பகுதிகளில் மின்விளக்குகள் அமைத்து தருவதற்கும் கழிவுநீர் தொட்டிகள் அமைத்து தரவேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை வைத்தும் இன்றுவரை நிறைவேற்றப்படாததால் வார்டு பகுதியில் உள்ள அனைத்து மக்களும் நகராட்சி நிர்வாகத்தில் போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளார் என்றும் தாங்கள் உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்றும் கவுன்சிலர் கோரிக்கை வைத்தார். கோரிக்கைகள் அனைத்தையும் கேட்டு அறிந்த நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா துணைத் தலைவர் ஹமீது சுல்தான் ஆகியோர் விரைவில் சரி செய்து தருவதாக தெரிவித்தனர் அதனைத் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

EID MUBARAK

You may also like

Leave a Comment

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!