Home நகராட்சி தித்திக்கும் சுத்தமான தேன் கீழக்கரையிலும் கிடைக்கும்…

தித்திக்கும் சுத்தமான தேன் கீழக்கரையிலும் கிடைக்கும்…

by ஆசிரியர்

கீழை டைரி – 3

BE A BEE காட்டுத் தேன்..

முயலான் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல!” – இது பழமொழி.

இந்த பழமொழி காலப்போக்கில் முயலான் என்ற வார்த்தை மருவி முடவன் என்று மாறி ‘முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல’ என புழக்கத்தில் பேசப்படுகிறது. அதாவது, முயலான் என்றால் முயற்சி செய்யாதவன் என்று பொருள். கொம்புத் தேன் என்பது பெரிய மலை உச்சியிலும், காடுகளில் பெரிய பெரிய மரங்களின் உச்சியிலும் தேனீக்களால் தேன் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அந்த தேனீக்களிடமிருந்து தேனை எடுப்பது ஒரு சாதாரண விசயமல்ல. அந்த தேனை முயன்றால் தான் எடுக்க முடியும்.

எனவே தான் முயற்சி செய்யாமல் ஒரு பொருளின் மீது ஆசைபடுபவனிடம், “முயலான் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல!” என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இத்தனை பெருமைகளையும் உடைய தேனை கீழக்கரையில் வீட்டில் இருந்தவாரே வியாபாரம் செய்து வருகிறார்கள். அத்தேனின் சிறப்புகள்தான் கீழே தரப்பட்டுள்ளது.

BE A BEE (தேனீயாக இருங்கள்) என்ற நுட்பமான பெயரில் சுத்தமான காட்டுத்தேனை விற்கின்ற வளரும் நிறுவனத்தின் இராமநாதபுர வட்ட வினியோகத்தை நாங்கள் செய்து வருகிறோம்.

பொதுவாக நம்மவர்கள் மருந்துக்குத்தான் தேனைப் பயன்படுத்தி வருகிறார்கள். டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரையைத் தூளாக்கி அதைத் தேனில் குழைத்து குழந்தைகளுக்குத் தருவார்கள். அதற்கு 50 கிராம் தேன்புட்டி வாங்கி கொள்வார்கள். உண்மையில் தேனை நாள்தோறும் சுவைத்து வந்தாலே மருந்து மாத்திரைகளில் உயிர் வாழ்வதைப் பெரும் அளவில் தவிர்த்துவிட முடியும்.

BE A BEE நிறுவனம் காட்டுத்தேன், நாட்டுத்தேன் என்று இரண்டு வகைகளை விற்பனை செய்கின்றது. காட்டுத்தேனைப் பச்சையாக விற்கிறது. தேனைக் காய்ச்சி, வடிகட்டாமல் பச்சையாக விற்கும்போது சில சமயங்களில் அது கெட்டித்தன்மை இல்லாதும் இருக்கலாம், உறையலாம், நுரைக்கலாம். ஆனால், பரிபூரணச் ஊட்டச்சத்தும் மருத்துவ குணமும் உடையது இதுவே.

தேன் ஒரு தொழிற்சாலையின் உற்பத்தி பொருள் அல்ல. எப்போதும் ஒரே சுவை, ஒரே நிறம், ஒரே அடர்த்தி, ஒரே மணம் என்று விற்க முடியாது. தேனீக்கள் பூக்களின் மதுரத்தை உறிஞ்சித் தங்கள் பிரத்தியேக வயிற்றில் எடுத்து வந்து தங்களிடையே உமிழ்ந்து, பல முறை உறிஞ்சி உமிழ்ந்து தேனாக ஆக்குகின்றன. பூக்களுக்கு ஏற்றவாறே சுவை, நிறம், மணம் அமைகின்றன. தட்ப வெப்பத்திற்கு ஏற்ப அடர்த்தி மாறுகின்றன. எனவே, ஒரு முறை வாங்கி உண்ட அதே சுவையில், நிறத்தில் அடுத்த முறையும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. நாங்கள் சாம்பிள் தர மறுப்பதற்கு இதுவும் காரணம். புட்டிக்குப் புட்டி தேன் வேறுபடலாம்.

எங்களிடம் பலரும் சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிப்பது என்று கேட்பார்கள். கலப்படத்தைக் கண்டறிய நீரில் விட்டுப் பார்த்தல், மை உறிஞ்சு காகிதம்/பருத்தித் துணியில் சொட்டு விடுதல், நாய் நக்குகிறதா, எறும்பு மொய்க்கிறதா (சில சமயங்களில் வாடை பிடித்தால் மொய்க்கும்) என்று பார்த்தல், தீக்குச்சி உரசுதல், உயிருள்ள ஈயை அமுக்கிப் பறக்கவிடுதல் போன்ற வித்தைப் பரிசோதனைகள் அறிவியல் உலகம் ஏற்காதவை. நம்பகமான சாட்சி, நவீன பரிசோதனைக் கூடம் தருகின்ற அறிக்கை ஆகிய இரண்டு மட்டுமே எங்களுக்கு அளவுகோள்கள்.

இங்கு நாட்டுத்தேன் குறித்தும் சில விஷயங்களைக் கூற வேண்டியுள்ளது. பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிக்காமல் விவசாயம் செய்கின்ற பகுதிகளிலும், பசுமையான தோட்டங்களிலும் பெட்டிகளில் தேனீக்களை வளர்த்துச் சேகரிப்பது நாட்டுத்தேன். சர்க்கரை நீரில் தேனீக்களை மொய்க்கவிட்டுச் சேகரிப்பதாக நினைப்பது தவறு. பெட்டிகளில் கூடுகட்டி வாழும் தேனீக்கள் மழைக்காலத்தில் எங்கும் செல்ல முடியாமல் உணவின்றி சாகக் கூடாது என்றே தேனீ வளர்ப்போர் சர்க்கரை கரைசலை வைப்பதுண்டு.

காட்டுத்தேனைப் பச்சையாக விற்கும் நாங்கள் நாட்டுத்தேனைப் பதப்படுத்தி விற்கிறோம். தேனை நீராவி மூலம் காய்ச்சி அதிலுள்ள ஈரப்பதத்தைக் குறைத்து வடிகட்டும் முறைக்குப் பதப்படுத்துதல் எனப்படும். தேனில் கலந்து கிடக்கும் மெழுகுத் துணுக்குகள், காற்றுக் குமிழ்கள், தேனீயின் இறக்கைகள், கால் துண்டுகள், தூசுகள் இவற்றை நீக்குவதே இதன் நோக்கம். இதைத் தீவிரமாக இல்லாமல் எளிதான சூட்டில் காய்ச்சி வடிகட்டி, தேனின் ஈரப்பதத்தைக் குறைக்கிறோம். இதனால் அது விரைவில் உறையாமலும், ஈஸ்ட் (உயிரிகள்) அதிகரித்து புளிப்புச் சுவை வராமலும் நுரைக்காமலும் இருக்கும்.

தேனுக்கு காலாவதி இல்லை. கெடவே செய்யாது. எனினும், அதன் தன்மைகள் மாற்றமடைவதால் Best Before என்று மாதக்கணக்குக் குறிப்பிடும்படி fssai எனும் உணவுத் தரக்கட்டுப்பாடு விதி கூறுகிறது. Best Before என்றாலே குறிக்கப்பட்ட அதன் காலம் கடந்தாலும் அந்த உணவு உண்ணத் தகுதியானது என்பதுதான்.

நாங்கள் பிற நிறுவனங்களின் விலையை ஒப்பிட்டுப் பார்த்து விலை நிர்ணயம் செய்வதில்லை. விலையில் போட்டி இடுவது BAB கொள்கை அல்ல. தரத்தில் போட்டி இடுகிறோம். பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கும் மருந்துகள் (Anti Biotic) புகட்டப்படாத நாட்டுத் தேனீக்களின் தேனை இரசாயனங்கள் இல்லாமல், எவ்விதக் கலப்படமும் செய்யாமல், தரமாக விற்பதே எங்கள் கொள்கை. இதற்காக ஏற்படும் எல்லாக் கூடுதல் செலவையும் நாங்கள் எதிர்கொள்வதால் அதற்குத் தகுந்த விலையில்தான் தர முடிகிறது. ஒவ்வொரு பொருளும் அதன் தரத்திற்குரிய விலையில்தானே கிடைக்கும்?. எங்கள் வாய்மையில் நம்பிக்கை இருந்தால் வாங்கி உண்ணுங்கள். பிரார்த்தனைகள்.

எங்கள் பொருட்களின் விலை விபரம் கீழே:-

பச்சைக் காட்டுத்தேன் விலை விவரம்: * 1 கிலோ ரூ.640 * 1/2 கிலோ 350 * 1/4 கிலோ 190

நாட்டுத்தேன் விலை விவரம்: * 1 கிலோ ரூ.440 * 1/2 கிலோ 250 * 1/4 கிலோ 140

தரமான தேனை கீழக்கரையில் வாங்க 7868989329 (நலீம்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!