50
இராமநாதபுரம், நவ.4 – இராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து கடந்த ஒரு வாரமாக லேசானது முதல் கன மழை பெய்து வருகிறது. கடலோரப்பகுதி உள்பட பல்வேறு இடங்களில் நேற்றிரவு முழுவதும் மழை பெய்தது. இதில் கமுதியில் 123 மிமீ., தீர்த்தாண்டதானம் 69.80 மிமீ, பரமக்குடி 66 மிமீ ஆர்.எஸ் மங்கலம் 63 மிமீ, வட்டாணம் 40.20 மிமீ, ராமநாதபுரம் 36.40 மிமீ, திருவாடானை 27 மிமீ, முதுகுளத்தூர் 20 மிமீ, தங்கச்சிமடம் 19மிமீ என மாவட்டம் முழுவதும் 518 மிமீ., மழை பெய்துள்ளது. சராசரியாக 32.42 மிமீ மழை பெய்துள்ளது.
இதில் 2 வீடுகளும், கமுதி கோட்டைமேடு அரசு கால்நடை மருத்துவமனை முன் இருந்த வாகை மரம் முறிந்த விழுந்ததில் சிவலிங்கம் என்பவரது டீ கடை முற்றிலும் சேதமானது.
You must be logged in to post a comment.