காமராஜரின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா!

இராமநாதபுரம் காமராஜர் அறக்கட்டளை    சார்பில் காமராஜர்     116 வது பிறந்தநாள் விழா ராமநாதபுரம் லெட்சுமி- தங்கம் மகாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது . காமராஜர் அறக்கட்டளை செயலாளர் பெரியகருப்பன் அனைவரையும் வரவேற்றார் ஆசிரியர் குணசேகரன் ஆண்டறிக்கை வாசித்தார் பால் ரதி மாரியப்பன்  குத்துவிளக்கு ஏற்றினார்.

இராமநாதபுரம் வி.பி.எம்.கே ஜூவல்லர்ஸ் உரிமையாளர் கருணாமூர்த்தி காமராஜர் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார். விழாவில் மதுரை நாடார் மகாஜன சங்க வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி தலைவர் பெரிஸ் மகேந்திரவேல்  கலந்துகொண்டு கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.    கடந்த பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் இராமநாதபுரம் மாவட்டத்தில் 494 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்த   மீனாட்சி சுந்தரம் மகள் பிரியங்கா உள்ளிட்டோருக்கு   பரிசு வழங்கப்பட்டது.   கூட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மாரியப்பன்,  குகன்,   ஆசிரியர் அனுமந்தன், குமரன் உள்ளிட்ட நாடார் சங்க பல்வேறு அமைப்பு பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

#Paid Promotion