Home செய்திகள் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் அவரது பிறந்த நாள் கொண்டாட்டம்..

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் அவரது பிறந்த நாள் கொண்டாட்டம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம், அக்.13 – 

முன்னாள் ஜனாதிபதி ஏபிஜெ.அப்துல் கலாம் 92 வது பிறந்த நாளையொட்டி, அவர் பயின்ற ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் எக்ஸ்போரியா பவுண்டேஷன் சார்பில் குழந்தைகளை ஊக்கப்படுத்தி தேசத்தின் இலக்கை அடையலாம் திட்ட துவக்க விழா நடந்தது.  ராமநாதபுரம் கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். கவனம் சிதறாமல் படித்தால் உன்னத நிலையை அடையலாம். படிக்க கிடைக்கும் வாய்ப்புகளை கெட்டியாகப் பிடித்து கொண்டு படித்தால் பல்வேறு துறைகளில் பலரும் போற்றும் வகையில் ஜொலிக்கலாம். கலாம் கூற்றிற்கேற்ப தூங்கவிடாத கனவுகளை துரத்தி பிடித்து முன்னேற வேண்டும் என  நடிகர் கமல் ஹாசன் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். ஏழையாக பிறந்த பலர் கல்வியால் உயர்ந்த பலரின் வாழ்க்கை சம்பவங்கள் மூலம் மாணவர்கள் மத்தியில்  டிஜிபி (பணி நிறைவு) முனைவர் சி.சைலேந்திர பாபு, பேசினார். ஆக்கப்பூர்வ வினா எழுப்பிய மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தென்னிந்திய திருச்சபை திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் திருமண்டல பேராயர் முனைவர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் ஏற்புரை ஆற்றினார். ராமநாதபுரம் எஸ்பி தங்கதுரை, எக்ஸ்போரியா குளோபல் சேர்மன் சசி நாகா, சமூக செயல்பாட்டாளர் மின்னல் முஹமது அலி உள்பட பலர் பங்கேற்றனர். இதை தொடர்ந்து தேசத்திற்கு அப்துல் கலாமின் சிறந்த சேவையை போற்றும் விதமாக , ஸ்வார்ட்ஸ் பள்ளி வளாகத்தில்  அப்துல் கலாமின் ஆளு உயர உருவப் படத்தை டிஜிபி (ஓய்வு) திறந்து வைத்தார். அப்துல் கலாம் பெயரில் மென் திறப்பு வகுப்பறையை  கலெக்டர் விஷ்ணு சந்திரன் திறந்து வைத்தார். பள்ளியில் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட உள்ளது. மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள், பள்ளி பைகள், கண்ணாடி பாட்டில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நுழைவு வாயில், பிரதான கட்டடம் கட்டப்பட உள்ளது. மாணவர்கள், ஆசிரியர்களின் சுகாதார மேம்படுத்த எக்ஸ்போரியா பவுண்டேஷன் திட்டமிட்டுள்ளது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com