இராமநாதபுரம் மரைன் போலீசார் முத்துப்பேட்டை கடற்கரை பகுதியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்திரா நகர் கடற்பகுதியில் தென்னந்தோப்பில் சாக்கு மூடைகளுடன் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் மீது சந்தேகமடைந்தனர்.அங்கு சென்ற போலீசார் மூடைகளை பிரித்து சோதனையிட்டனர். அதில் 45 பெட்டிகளில் 3,700 சோப்பு,79 பெட்டிகளில் 2,960 சாக்லேட், 225 பெட்டிகளில்உடல் வாசனை திரவியம், 180 பெட்டிகளில் 2,750 கொசு விரட்டிகள், 805 ஊதுபத்தி குச்சிகள், 50 பெட்டிகளில் அழகுசாதனப் பொருட்கள், ஷாம்ப் பாக்கெட்கள் இருந்தது தெரிந்தது. 8 மூடைகளில் இருந்த இப்பொருட்களின் மதிப்பு ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது. சரக்கு வாகனத்துடன் பொருட்களை கைப்பற்றிய போலீசார் விசாரணையில்,இலங்கைக்கு இரவில் கடத்தி மும்மடங்கு லாபம் பெற திட்டமிடப்பட்டிருந்தது தெரிந்தது.புதுமடம் மரைன் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். கடத்த திட்டமிட்டிருந்த கும்பல் குறித்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.
48
You must be logged in to post a comment.