Home செய்திகள் JIO மெகா சலுகை.. விளம்பரத்தில் ஒன்று … நடைமுறையில் வேறு..

JIO மெகா சலுகை.. விளம்பரத்தில் ஒன்று … நடைமுறையில் வேறு..

by ஆசிரியர்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு JIO நிறுவனம் பழைய கைப் பேசிகளை கொடுத்து, ₹.501/- செலுத்தி புதிய JIO-2 மாடல் கைபேசியை பெறலாம் என அறிவித்திருந்தது.  அச்சலுகை இன்று (21/07/2018) முதல் தொடங்கும் எனக்கூறி பல்லாயிர கணக்கான வியாபார முகவர்கள் முன் பணம் கட்டி புதிய கைபேசியை இன்று விற்பனைக்கு வாங்கினர்.

ஆனால் இன்று அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்த புதிய மாடல் அலைபேசியை வாங்கும் வாடிக்கையாளர்கள் ₹.594/-கு ரீசார்ஜ் செய்வது அவசியம் என்ற அறிவிப்பை அவர்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.  இதனால் முன் பணம் கட்டி அதிக எண்ணிக்கையில் கைபேசியை இருப்பில் வாங்கி வைத்த முகவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது சம்பந்தமாக பாண்டிச்சேரியை சார்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில், எங்களிடம் 7 வாடிக்கையாளர்கள் முன் பதிவு செய்திருந்தனர், ஆனால் 1 நபர் மட்டுமே வாங்கியுள்ளார்.  அதேபோல் மற்றொரு நிறுவனத்தில் 24 பேர் பதிவு செய்ததில் 3 நபர்கள் மட்டுமே வாங்கியுள்ளதாக கூறினார்.

இதுதான் டிஜிட்டல் இந்தியா சலுகை…

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com