இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -2
கப்ளிசேட்
அப்பாஸிய பேரரசு-15
(கி.பி 750-1258)
இந்தியாவின் வட எல்லையில் ஆட்சியிலிருந்த கஜ்னவி பேரரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட திரான் ஆக்ஸியானா பகுதியில் துருக்கியர்கள் குடியேறினர்.
செல்ஜுக் என்ற துருக்கிய தலைவரின் குடும்பத்தினர்கள் குராசான் பகுதியில் குடியேறினர்.
கஜ்னவி சுல்தான் மஹ்மூது மரணமடைந்த பிறகு சுல்தான் மஸ்ஹுத் பதவி ஏற்றார்.
சுல்தான் மஸ்ஹுத்தை தோல்வியடையச் செய்து செல்ஜுக்கியர்கள் குராசானை கைப்பற்றினர்.
செல்ஜுக் என்ற துருக்கிய தளபதியின் பேரர் தஹ்ரல் பைக் மிகச்சிறந்த வீரராக இருந்தார்.
அவரது தலைமையில் குராசான் பகுதியில் செல்ஜுக்கியர்களின் ஆட்சி மலர்ந்தது.
செல்ஜுக்கியர்கள் “சுன்னத் வல் ஜமாத் ” கொள்கையை பேணினார்கள்.
முந்தைய புவைஹிக்கள் சியா கொள்கையை பின்பற்றியதால் அதனை பிடிக்காத பெரும்பான்மையான மக்கள் செல்ஜுக்கியர்கள் பின்பற்றிய சுன்னத் வல் ஜமாத் கொள்கையால் இவர்களை வெகுவாக ஆதரித்தனர்.
புவைஹிக்களிடம் இருந்து பாக்தாத்தை கைப்பற்றினர். செல்ஜுக்கியர்கள் தங்கள் தலைநகராக “மெர்வ்” நகரை கட்டமைத்தனர்.
இதனை அப்பாஸிய பேரரசர் அல்காயீம் வரவேற்றார். புவைஹிக்களை ஆதரித்து வந்த பாக்தாத் படைத்தளபதி பசாசூரியை செல்ஜுக் படை துறத்திவிட்டு, பாக்தாத்தை முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
பசாசூரி பாத்திமியாக்கள் என்ற குழுவின் துணையோடு பாக்தாத்தின் மீது படை எடுத்து செல்ஜுக்கியர்களை ஆதரித்த அப்பாஸிய மன்னர் அல்காயீமை கைது செய்துவிட்டு அப்பாஸிய பேரரசின் புதிய மன்னராக அல் முன்தஸிர் என்பவரை பதவி ஏற்க வைத்தனர்.
செல்ஜுக் படைகள் மீண்டும் பாக்தாத்தை கைப்பற்றி அல் காயீமை அப்பாஸிய மன்னராக அறிவித்தனர். அந்த அளவிற்கு அப்பாஸிய அரசு வலுவிழந்து இருந்தது.
செல்ஜுக் சிற்றசரின் தலைவர் தஹ்ரல் பைக் அவர்களுக்கு சுல்தான் பட்டம் வழங்கியதோடு, அப்பாஸிய பேரரசர் காயீம் அவர்கள், மத்திய ஆசிய மாகாணத்தையும் பரிசாக வழங்கினார்.
தஹ்ரல் பைக் மிக எளிய வாழ்வு வாழ்ந்தார்.கல்வி,மதநம்பிக்கைகள், பேணுதல்கள், அறப்பணிகள் என்று சாதாரண எளிமையான மனிதரராக இருந்தார்.
இவர் மத்திய ஆசியப்பகுதிகள், ஈராக், குவாரிஜிமி பகுதிகளில் வெற்றி பெற்றார். பைசாந்தியர்களோடு போரிட்டு வெற்றி பெற்றனர்.
நிறைய பள்ளி வாசல்களையும், மதரசாக்களையும், ஏற்படுத்தினார்கள். கல்விக்கூடங்களை ஏற்படுத்தினார்கள்.
இதுபோன்ற செல்ஜுக் மன்னர் தஹ்ரல் பைக் அவர்களின் கொள்கைகளும், எளிய வாழ்வும், நல்ல செயல்களும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.
தஹ்ரல் பைக் அவர்களுக்கு வாரிசுகள் இல்லை. தஹ்ரல் பைக் மரணமடைந்தார்.
அவரது சகோதரர் மகன் அல்ப் அர்ஸலான் மன்னராக பதவி ஏற்றார்.இஸ்பஹான் தலைநகராக இருந்தது.சுல்தான் பட்டம் வழங்கப்பட்டது.
ஆர்மீனியா, ஜோர்ஜியா பகுதிகளை கைப்பற்றினார். இவர் சிறந்த கல்வியாளராகவும், நல்ல குணம் படைத்தவராகவும் இருந்தார்.
இவரது படைகள் ரோம பகுதிகளில் ஊடுறுவி ரோம மன்னரை கைது செய்தது.
ஆகவே ரோம அரசர் இவர்களிடம் ஈட்டுத்தொகை செலுத்தினார்.
செல்ஜுக்கியர்கள் ரோமர்களின் பிரதேசத்தில் கால் பதித்தனர்.
இந்திகழ்வு பல திருப்புமுனைகளை ஏற்படுத்தியது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
You must be logged in to post a comment.