விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிறுவனுக்கு மனிதாபிமானத்துடன் உதவிசெய்யும் காவல் உதவி ஆய்வாளர்..

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நேற்று கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் மலேசியவை சேர்ந்த ஈஸ்வரி அவரது மகன் சஞ்சய் பழனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கார் விபத்தில் படுகாயமடைந்த ஈஸ்வரியின் மற்றோரு மகன் தேவனநந்த ( வயது 11) இவர் படுகாயம் அடைந்து பழனி அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரது உடல் மேலும், மோசமடைந்ததால் மேல்சிகிச்சைக்காக கோவைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.அப்போது அங்கு இருந்த பழனி சார்பு ஆய்வாளர் ரஞ்சித் மற்றும் சாந்து என்பவர் கோவை தனியார் மருத்துவமணைக்கு அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வரை மனிதாபிமான அடிப்படையில் சிறுவனுக்கு பழனி நகர் சார்பு ஆய்வாளர் ரஞ்சித் தனது சொந்த பணத்தை மருத்துவமணைக்கு செலுத்தி சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.

#Paid Promotion