தமிழகத்தின் சிறந்த மருத்துவமனை என பட்டம் வாங்கிய உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை ஏற்றுவதற்கு ஆம்புலன்ஸ் இல்லாத அவலநிலை..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டியைச் சேர்ந்தவர் ராமதேவி (35).இவர் தனது ஊரில் ரோட்டைக்கடக்க முயன்ற போது எதிரே வந்த ஷேர்ஆட்டோ மோதியதில் படுகாயமடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸிற்கு போன் செய்துள்ளார்கள். ஒரு மணி நேரம் ஆகியும் வண்டி வராததால் வேறு வழியின்றி ஷேர் ஆட்டோவிலேயே உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.ராமதேவி முதலுதவி சிகிச்சை அளித்த பின் மருத்துவர்கள் அவரை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.அங்கிருந்தவர்கள் மருத்துவமனை ஆம்புலன்ஸ் எங்கே எனக் கேட்டதற்கு மதுரை சென்று விட்டதாக அலட்சியமாக பதிலளித்துள்ளனர். வேறுவழியின்றி ராமதேவியின் உறவினர்கள் பினத்தை ஏற்றும் தனியார் ஆம்புலன்ஸில் கொண்டு சென்றுள்ளனர்.

இந்த உசிலம்பட்டி அரசு மருத்துவமனைதான் கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகத்தின் சிறந்த மருத்துவமனை என மத்திய அரசிடம் விருது பெற்றது.ஆனால் அவசரத் தேவைக்கு நோயாளிகளை ஏற்றுவதற்கு மருத்துவ மனையில் ஓரு ஆம்புலன்ஸ் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி:- மோகன், உசிலம்பட்டி