தலைக்கவசம்… உயிர்க்கவசம்… கீழக்கரை ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மக்கள் நலப்பணி..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை  ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் வாகன விழிப்புணர்வு முகாம் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இலவச தலை கவசம் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சி கீழக்கரை சார்பு ஆய்வாளர் சரவணன் தலைமையில் ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் முன்னிலையில் இன்று 5.10.2020 கீழக்கரை முக்கு ரோடு பகுதியில் தலைக்கவசம் இல்லாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு சார்பு ஆய்வாளர் ரமேஷ் தலைமை காவலர் முனீஸ்வரன், தலைமை காவலர் இளமுருகன் தலைமை காவலர் ரமேஷ், காவலர் திருமுருகன் மட்டும் ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்ற அமைப்பை சார்ந்த தலைவர் ரைசுல் இஸ்லாம், துணைத்தலைவர்கள் வாசிம் அக்ரம், ஆசிக் ரஹ்மான், செயலாளர் பயாஸ் அலி, துணைச்செயலாளர் அன்வர்ஷா மற்றும் உறுப்பினர்கள் ஜலால், ரஹிம், அல்காசிம், நவ்பல், முஸ்தாக் மேலும் 30க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துக்கொண்டார்கள்.

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

உதவிக்கரம் நீட்டுங்கள்..