Home செய்திகள் இந்த சத்தம் எந்நேரமும், இப்போ மாறுமோ? எப்போ மாறுமோ?

இந்த சத்தம் எந்நேரமும், இப்போ மாறுமோ? எப்போ மாறுமோ?

by Askar

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பகுதிகளான ஆத்தூர், செம்பட்டி,சித்தையன் கோட்டை பகுதிகளில் விஷேசகாலங்களில் திருமண மண்டபங்களில் வைக்கப்படும் ஒலிபெருக்கிகளால் அவதி.

செம்பட்டிபகுதியில் திருமண மண்டபத்தின் அருகாமையில் பொதுமக்கள் குடியிருப்பு, காவலர் குடியிருப்பு, சிறுவியாபார ஸ்தாபனம் மற்றும் காவல்நிலையம்.ஆத்தூர் திருமண மண்டபம் அருகில் பொதுமக்கள் குடியிருப்பு, பத்திரப் பதிவுத்துறை அலுவலகம், சிறுவியாபார கூடம். சித்தையன் கோட்டை திருமண மண்டபம் அருகே, பேருந்து நிலையம், சிறுவர்கள் பள்ளிக்கூடம், நூலகம், தொலைபேசி அலுவலம், வங்கி, பச்சிளம் குழந்தைகள் பாலூட்டி நிலையம்,மின்சார வாரியம் கிளை அலுவலம் மற்றும் சிறுவியாபாரிகள் தொழில் கூடங்கள் உள்ளது. இவை அனைத்தும் திருமண மண்டபங்களின் 50 மற்றும் 100 மீட்டர் தூரத்திற்குள் அமைந்துள்ளது.

ஆனால், திருமண மண்டபத்தில் விஷேசகாலங்களில் ஒலிபெருக்கி வைப்பவர்கள் இவைகள் எதையும் கவணத்தில்கொள்ளாமல் 1000 வாட்ஸ் ஆம்பிள்பயர் உதவியுடன் ஆளுயர ஸ்பீக்கர் பாக்ஸ்கள் இரண்டு அல்லது மூன்று மற்றும் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ள்ள கூம்பு வடிவ குழாய்களையும் கட்டி அந்த பகுதியையே அலர வைக்கிறார்கள்.

இதை யாரேனும் கேட்டால் ஒலிபெருக்கி வைப்பவர்கள் விஷேச வீட்டாரின் உதவியோடு கேட்பவர்களை தாக்கவும் துணிகிறார்கள். ஒரு விஷேசம் நடைபெரும் போது சம்பந்தப்பட்ட வீட்டார், மற்றும் அவரிடம் வருமானம் பெரும் ஒலிபெருக்கி உரிமையாளர் மற்றும் திருமண மண்டப உரிமையாளர் மட்டுமே! ஆனால், இவர்கள் மூவரும் இதை கருத்தில் கொள்வதில்லை. இதனால், அருகாமையில் இருக்கும் அனைவரும் பலவழிகளில் பாதிப்படையும் நிலை உள்ளது. கிராம மக்கள் ஒன்றிணைந்து வருடம் ஒருமுறை கொண்டாடப்படும் திருவிழாவிற்கு கிராம கோவில் நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பகுதி காவல்துறையினருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தகவல் தெரிவித்து அனுமதி பெற்றபிறகே நேரம் குறிப்பிடப்பட்டு ஒலிபெருக்கி வைக்கிறார்கள்.

ஆனால், விஷேசவீட்டில் ஒலிபெருக்கி வைப்பவர்கள் காவல்துறையில் அனுமதி பெறவேண்டும் என்ற விதிமுறை இருந்தும் அதை கவணத்தில் கொள்வதுமில்லை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஒலிபரப்பப் படுவதும் இல்லை, இரவும் இல்லை, பகலும் இல்லை அவர்கள் வைத்ததுதான் சட்டம். இதுபோன்ற நிலைபாடு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தொடர்வதால் வரும் காலங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலையிட்டு இதுபோன்ற அதிரடி ஒலிபெருக்கி உரிமையாளர்களின், அதிர்வலை சப்தத்தை கட்டுப்படுத்தும் விதமாகவும் விஷேசகாலங்களில் திருமண மண்டபங்களின் அருகாமையில் உள்ள பொதுமக்களுக்கும், வயோதிகர்கள், நோயாளிகளுக்கும், வருங்கால இளைய தலைமுறைகளாகிய பள்ளி குழந்தைகளின் படிப்புக்கும் இடையூறு ஏற்படாதவாறு மண்டபத்தின் உட்பகுதியில் சிறிய அளவு ஸ்பீக்கர் பாக்ஸ்களை வைத்து ஒலிபரப்புதற்கு உத்தரவிட வேண்டும். என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com