தேனியில் மக்கள் வசிக்கும் பகுதியில் சாக்கடை தேங்கி நிற்கும் அவலம்…. வீடியோ ..

தேனி மாவட்டம் வெங்கடஜலாபுரத்தில் உள்ள சவளப்பட்டி கிராமத்தில் 150 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள் தெருவில் உள்ள சாக்கடையில் கழிவு நீர் வெளில் செல்ல முடியமால் தேங்கி, கல் மண் போன்ற இடங்களில் தேங்கிய கழிவு நீரில் கொசுக்கள் தங்கி நோயை பரப்புகிறது.

அப்பகுதிகளில் பயன்படுத்தும் நீர் செல்ல வழியில்லாமல் சாக்கடை தண்ணீர் வீட்டுகளில், தெருக்களில் போவதால் டெங்கு , மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் நோய் பரவும் அபாயத்தில் உள்ளனர். ஊராட்சி அலுவலர் விரைந்து சாக்கடை கழிவு நீரை தூர் வாரி கால்வாய் அமைத்து தர ஆதித் தமிழர் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க ஊராட்சி அலுவலரை வலியுறுத்துகின்றனர்.

தேனி செய்தியாளர்:- பால் பாண்டி