கீழக்கரை ஹமீதியா தொடக்க பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது….

15-07-2017 அன்று ஹமீதியா தொடக்க பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக  A. முஹம்மது மஃரூஃப் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

தாளாளர் S. முஹம்மது நஸீர் காமராஜரை பற்றி மாணவர்களுக்கு சிறப்புரை வழங்கினார். புதிய தாளாளராக பொறுப்பேற்க இருக்கும் P.S.L.H. சதக் இல்யாஸ் மாணவர்களுக்கு சீருடைகளை இலவசமாக வழங்கினார்.

மாணவ, மாணவியருக்கு காமராஜரைப் பற்றிய போட்டிகள் நடைபெற்றன. விழாவில் சங்க உறுப்பினர்களும், பெற்றோர்களும் அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.