Home செய்திகள்கீழக்கரை செய்திகள் நெல்லையில் அஞ்சல் துறை சார்பில் குறைதீர்க்கும் கூட்டம்…

நெல்லையில் அஞ்சல் துறை சார்பில் குறைதீர்க்கும் கூட்டம்…

by ஆசிரியர்

அஞ்சல் துறை சார்பில் குறைதீர்க்கும் கூட்டம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் எதிர்வரும் 29.03.19 அன்று நடைபெறவுள்ளது. இந்த குறைதீர் கூட்டம் குறித்து திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சாந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தின் முதல் தளத்தில் திருநெல்வேலி கோட்டத்திற்கான அஞ்சல் குறைதீர் கூட்டம் மார்ச் 29 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் இதில் பங்கேற்று அஞ்சல் பணிகள் குறித்த குறைகள், அஞ்சல் சேவையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை உரிய விவரங்களுடன் தெரிவிக்கலாம்.

நேரில் வர முடியாதவர்கள் d‌o‌t‌i‌r‌u‌n‌e‌l‌v‌e‌l‌i.‌t‌n@‌i‌n‌d‌i​a‌p‌o‌s‌t.‌g‌o‌v.‌i‌n என்ற அஞ்சல் துறையின் மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 27 ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com