Home செய்திகள் மத நல்லிணக்கத்திற்கு இராமநாதபுரம் மாவட்டம் உதாரணம் காவல் துறை துணை தலைவர் காமினி பெருமிதம்..

மத நல்லிணக்கத்திற்கு இராமநாதபுரம் மாவட்டம் உதாரணம் காவல் துறை துணை தலைவர் காமினி பெருமிதம்..

by ஆசிரியர்

தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் ராமநாதபுரம், மண்டபம் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் ஜூனியர்களுக்கான கற்றல் பயிற்சி முகாம் நிறைவு விழா முத்துப்பேட்டை ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் இன்று (21/02/2019) நடந்தது. ராமநாதபுரம் கல்வி மாவட்ட ஜேஆர்சி கன்வீனர் ரமேஷ் வரவேற்றார்.

சிறந்த ஜூனியர்களுக்கு ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவர் என்.காமினி பரிசு வழங்கினார். அவர் பேசுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தை நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக திகழ்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் பற்றி பிற மாவட்டத்தினரின் தவறான எண்ணம் தற்போது முற்றிலும் மாறி விட்டது. ரெகுநாதபுரத்தில் இந்துக்கள், பெரிய பட்டினத்தில் முஸ்லிம்கள், முத்துப்பேட்டையில் கிறிஸ்தவர்கள் வசித்தாலும் ஒருமைப்பாடுடன் இணக்கமாக உள்ளனர். இங்கு பணியாற்றுவதில் பெருமிதம் அடைகிறேன். ஜூனியர் ரெட் கிராஸ் கற்றல் பயிற்சி பெற்ற மாணவர்கள் வருங்கால இளைய சமுதாயம் சிறப்பாக அமையும். மாணவர்கள் கிடைக்கும் நேரங்களில் புத்தகம் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தி கொள்ள வேண்டும். பொது அறிவு தொடர்பான புத்தகங்களை துணை கொண்டால் அரசு வேலைக்கான போட்டி தேர்வுகளுக்கு பெரிதும் உதவும் என்றார்.

துணை சேர்மன் சண்முக ராஜேஸ்வரன், கோபி, துணைத் தலைவர் ஜெயக்குமார், ராமநாதபுரம் ராயல் என்பீல்டு நிறுவன நிர்வாக இயக்குநர் முருகன் முரளி பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை கல்வி அலுவலர் முருகன், ராமநாதபுரம், மண்டபம் கல்வி மாவட்ட அலுவலர்கள் பிரேம், பாலதண்டாயுதபாணி, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் எஸ்.டேவிட் மோசஸ் (இரு மேனி), எஸ்.ஜோ விக்டோரினா டயஸ் (வண்ணாங் குண்டு), ஒய்.யுனைசி (ரெகுநாதபுரம் ), சித்தார் கோட்டை முகமதியா மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பி.ஹைதர் அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஜேஆர்சி மாநில பயிற்றுநர் கோவிந்தராஜ் கல்வி மாவட்ட கன்வீனர்கள் பிரபாகரன், தமிழ்ச்செல்வன், சின்ராஜ், பால சுப்பிரமணிய பாரதி ஆகியோர் பயிற்சி அளித்தனர். மாநில பயிற்றுநர்கள் பாலமுருகன், ஜீவா, பொருளாளர் குழந்தைசாமி முகாமை ஒருங்கிணைத்தனர். முத்துப்பேட்டை புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி ஜேஆர் சி கவுன்சலர் பிரான்சிஸ் பிரபாகரன் நன்றி கூறினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com